News October 19, 2025

பெற்றோரை கவனிக்காத ஊழியர்களுக்கு சம்பளம் கட்!

image

அன்பையும், பாசத்தையும் ஊட்டி தோளில் தூக்கி வளர்த்த பெற்றோர்களை கடைசி காலத்தில் கைவிட்டு செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு முடிவுகட்ட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. வயதான பெற்றோர்களை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10-15% பிடித்தம் செய்யப்பட்டு, பெற்றோருக்கு வழங்கப்படும் என அம்மாநில CM ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். அவரது இந்த செயலை எப்படி பார்க்கிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News October 19, 2025

தீபாவளி விடுமுறை.. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட அக்.21-ம் தேதி ஒருநாள் கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி முடிந்து, பல்வேறு நகரங்களில் இருந்து பொதுமக்கள் திரும்ப ஏதுவாக அக். 21 – 23 வரை 15,129 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிய மற்றும் புகார் தெரிவிக்க 94450 14436 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News October 19, 2025

தள்ளாடும் இந்தியா!

image

மழைக்கு பிறகு போட்டி தொடங்கியவுடனே ஷ்ரேயஸ் ஐயர் 11 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால், இந்திய அணி 45/4 என்ற நிலையில் தள்ளாடி வருகிறது. களத்தில் அக்சர் படேல் 10 ரன்களுடன் இருக்க, KL ராகுல் அடுத்த பேட்ஸ்மேனாக வந்துள்ளார். மழை காரணமாக, போட்டி தலா 35 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தள்ளாடி வருகிறது.

News October 19, 2025

படகு விபத்தில் பலியான 3 இந்தியர்கள், 5 பேர் மாயம்

image

மொசாம்பிக் நாட்டில் உள்ள பெய்ரா துறைமுக பகுதியில், ஊழியர்கள் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 14 இந்தியர்கள் இருந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் பெய்ரா நகரில் உள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!