News October 19, 2025

பெற்றோரை கவனிக்காத ஊழியர்களுக்கு சம்பளம் கட்!

image

அன்பையும், பாசத்தையும் ஊட்டி தோளில் தூக்கி வளர்த்த பெற்றோர்களை கடைசி காலத்தில் கைவிட்டு செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு முடிவுகட்ட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. வயதான பெற்றோர்களை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10-15% பிடித்தம் செய்யப்பட்டு, பெற்றோருக்கு வழங்கப்படும் என அம்மாநில CM ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். அவரது இந்த செயலை எப்படி பார்க்கிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News December 13, 2025

தமிழ் நடிகை மரணம்.. கடைசி PHOTO

image

நடிகை ராஜேஸ்வரி மறைவுக்கு அவரின் நெருங்கிய தோழியும், நடிகையுமான மீனா செல்லமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜேஸ்வரி தன்னுடன் சிரித்த முகத்துடன் எடுத்த கடைசி போட்டோவை பதிவிட்டு, ‘நான் ஒரு ஆளு 10 ஆம்பளைக்கு சமம்னு சொல்லுவியே!, ஏன் இப்படி தற்*லை பண்ணுன ராஜி!, ஆசை ஆசையா வளர்த்த பொண்ண பத்திகூட யோசிக்காம இந்த முடிவு எடுத்திட்டியே, மனசு வலிக்குது ராஜி என உருக்கமாக இரங்கல் கூறியுள்ளார்.

News December 13, 2025

இன்னும் 5 வருடத்தில் இவை அனைத்தும் அழிந்துவிடும்!

image

டெக்னாலஜி என்றும் வளர்ச்சியடைக்கூடியதே. ஒரு காலத்தில் அனைவரது வீட்டிலும் இருந்த ரேடியோ இன்று அட்ரஸே இல்லாமல் ஆகிவிட்டன. அப்படித்தான் தற்போது நாம் யூஸ் பண்ணும் பல விஷயங்களும் டெக்னாலஜியின் வளர்ச்சியால் இன்னும் 5 ஆண்டுகளில் முற்றிலுமாக அழிந்துவிடலாம். அவை என்னென்னவென்று தெரிஞ்சிக்க போட்டோஸை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். காலப்போக்கில் இன்னும் எவையெல்லாம் மறையும் என நினைக்கிறீங்க?

News December 13, 2025

ஜெயலலிதாவின் வலதுகரம் TTV தினகரன்: அண்ணாமலை

image

அரசியல் வியூகங்களில் அனுபவம் மிக்கவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என TTV தினகரனுக்கு அண்ணாமலை வாழ்த்து கூறியுள்ளார். அத்துடன் மறைந்த CM ஜெயலலிதாவின் வலதுகரமாக திகழ்ந்தவர் டிடிவி எனவும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். இதற்கு அதிமுகவினர் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருவதால் மீண்டும் மோதல் போக்கு உருவாகியுள்ளது. அதிமுக, ஜெ.,-வுக்கு துரோகம் செய்தவர் TTV என EPS விமர்சித்து வருவது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!