News October 18, 2025
நாமக்கல்: காவலர்களுக்கு வாராந்திர அணிவகுப்பு பயிற்சி

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு பயிற்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விமலா, இ.கா.ப., இன்று (18.10.2025) பார்வையிட்டார். அப்போது, காவலர்கள் பணி நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை அவர் வழங்கினார். காவலர்களின் உடல் தகுதி மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு நடைபெற்றது.
Similar News
News October 19, 2025
நாமக்கல்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News October 19, 2025
நாமக்கல்: கனமழை காரணமாக தடை அறிவிப்பு

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவிகளில் இருந்து வரும் வெள்ள நீர் அடிவாரப் பகுதியான புளியஞ்சோலை ஆற்றுப்பகுதியில் கலக்கிறது. தற்போது இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த சில நாட்களாக அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
News October 19, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து இன்று (ஞாயிறு) இரவு 10: 50க்கு பெங்களூரூ, மாண்டியா, மைசூரு செல்லவும், இரவு 11:55 மணிக்கு பெங்களூரூ, தும்கூர், அரசிகெரே, சிவமோகா செல்லவும், நாளை (திங்கள்) அதிகாலை 4:20 மணிக்கு பெங்களூரூ, தும்கூர், அரசிகெரே, தாவங்கரே, ஹூப்ளி செல்லவும், காலை 8:30 மணிக்கு பெங்களூரூ செல்லவும் ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. எனவே ரயில் பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.