News October 18, 2025
நடிகை சமந்தா எக்கர் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகை சமந்தா எக்கர் (86) காலமானார். இவர் 3 முறை ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. The Brood, Doctor Dolittle, The Exterminator, The Dead Are Alive, Star Trek: The Next Generation, The Phantom உள்ளிட்டவை இவர் நடித்த படங்களில் முக்கியமானவை. இவர் அதிகம் ஹாரர் படங்களில் நடித்துள்ளார். RIP
Similar News
News October 19, 2025
GST 2.0: கல்லா கட்டிய கார், பைக் நிறுவனங்கள்

ஜிஎஸ்டி மறுசீரமைப்பின் எதிரொலியாக, பண்டிகை காலத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உச்சபட்ச விற்பனையை பதிவு செய்துள்ளன. நவராத்திரியின் 8 நாள்களில் மாருதி சுசூகி 1.65 கார்களையும், டாடா மோட்டர்ஸ் 50,000 கார்களையும் விற்பனை செய்துள்ளன. அதேபோல் மஹிந்திரா 60%, ஹுண்டாய் 72% அதிக விற்பனையை பதிவு செய்துள்ளன. மேலும் ஹீரோ, பஜாஜ் போன்ற டூவீலர் நிறுவனங்கள் 2 மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளன.
News October 19, 2025
மீனவர்கள் பிரச்னை பேசி தீர்க்கப்படும்: இலங்கை PM

இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்திற்கு இலங்கை துறைமுகங்கள் எப்போதும் சாதகமான நுழைவு வாயிலாக இருக்கும் என இலங்கை PM ஹரினி அமரசூரியா தெரிவித்துள்ளார். மீனவர்கள் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நட்பு, அணுகுமுறையின் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
IND Vs ENG: அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி, இன்றைய போட்டியில் வென்றால், அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாக அமையும். ஒருவேளை தோற்றால், நியூசிலாந்து உடனான அடுத்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழல் ஏற்படும். அதேபோல், இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வென்றால், அரையிறுதிக்கு தகுதி பெறும்.