News October 18, 2025
நக்சல் இல்லாத நாடாக இந்தியா மாறும்: PM

இந்தியாவில் கடந்த 3 நாள்களில் மட்டும் 303 நக்சலைட்கள் சரணடைந்துள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நக்சல் பயங்கரவாதத்தில் மகன்களை இழந்த தாய்மார்களின் வலி தனக்கு தெரியும் என்று கூறினார். அந்த தாய்மார்களின் ஆசிகளுடன், இந்தியா விரைவில் நக்சல் பயங்கரவாதத்திலிருந்து முழுமையாக விடுபடும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக PM குறிப்பிட்டார்.
Similar News
News October 19, 2025
ருக்மணியை கவர்ந்த ஹீரோ இவர்தான்!

‘காந்தாரா : சாப்டர் 1’ படம் மூலமாக பான் இந்திய நடிகையான ருக்மணி வசந்த் உருவெடுத்துள்ளார். நேஷனல் கிரஷ் என பலரும் அவரை வர்ணித்து வருகின்றனர். இந்நிலையில், அவரை கவர்ந்த ஃபேவரிட் ஹீரோ தெலுங்கு நடிகர் நானி என கூறியுள்ளார். நானியின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கும் எனவும், அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் ருக்மணி தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
GST 2.0: ₹7 லட்சம் கோடியை தாண்டும் வருவாய்

GST 2.0 எதிரொலியாக பண்டிகை கால விற்பனை உச்சத்தை அடைந்துள்ளன. டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின் விற்பனை 40 – 45% உயர்ந்துள்ளதாக Haier, ரிலையன்ஸ், LG, கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல், அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களிலும் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பண்டிகை காலத்தின் வருவாய் ₹7 லட்சம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 19, 2025
சிக்மண்ட் பிராய்ட் பொன்மொழிகள்

*நாம் ஒருவரையொருவர் தற்செயலாகத் தேர்ந்தெடுப்பதில்லை. நம் ஆழ் மனதில் ஏற்கனவே இருப்பவர்களை மட்டுமே நாம் சந்திக்கிறோம். *வரலாறு என்பது வெறுமனே புதிய மக்கள் பழைய தவறுகளைச் செய்வதுதான். *உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உங்கள் பலம் வெளிவரும். *தனக்குத்தானே முற்றிலும் நேர்மையாக இருப்பது ஒரு நல்ல பழக்கமாகும். *ஒருவரிடம் அவர் விரும்பியது இல்லாதபோது, தன்னிடம் இருப்பதை அவர் விரும்ப வேண்டும்.