News October 18, 2025
கோடி ரூபாய் கொடுத்தாலும் இத பண்ணமாட்டேன்: விஷால்

நடிப்பு, தயாரிப்பு என இயங்கி வரும் விஷால் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதுதான் ’Yours Frankly Vishal’ என்ற பாட்காஸ்ட். இதில் தனது அனுபவங்களை பகிர்ந்த விஷால், எத்தனை கோடி சம்பளம் கொடுத்தாலும் ’அவன் இவன்’ படத்தில் நடித்தது போல மாறு கண் கொண்ட கதாபாத்திரத்தில் இனி நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். அவன் இவன் படத்துக்கு பிறகு தனது கரியர் முடிந்துவிட்டது என நினைத்ததாகவும் பேசியுள்ளார்.
Similar News
News October 18, 2025
தங்கம் விலை ஒரே அடியாக மாறியது

தங்கம் விலை நாளொன்றுக்கு 2 முறை மாற்றம் கண்டு வருகிறது. இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கம் 1 சவரன் ₹96,000-க்கு விற்பனையாகி வருகிறது. இது கடந்த வாரத்தை விட ₹4,000 அதிகம். அதேபோல், அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை மீண்டும் சரிந்து, கடந்த வார விலைக்கே திரும்பியது. தற்போது, வெள்ளி 1 கிராம் ₹190-க்கு விற்பனையாகிறது. நாளை விடுமுறை என்பதால் விலையில் மாற்றம் இருக்காது.
News October 18, 2025
கோர விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் நடந்த விபத்தில் 8 பக்தர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குலதெய்வம் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, சந்த்ஷாலி கட் என்ற இடத்தில் வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. வேன் உருண்டதால் உள்ளேயிருந்த பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 8 பேர் அங்கேயே உயிரிழந்த நிலையில், பலர் படுகாயங்களுடன் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News October 18, 2025
லட்சியமா? காதலா? சமந்தா அட்வைஸ்

லட்சியம் (அ) பார்ட்னர், இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது நியாயமற்றது என சமந்தா கூறியுள்ளார். உங்களுடைய லட்சியங்களை நன்றாக புரிந்துகொள்ளும் ஒரு பார்ட்னரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், நாம் அதிகமாக கவலைப்படுவது பார்ட்னர் உள்ளிட்ட உறவுகளை பற்றித்தான் எனவும் கூறியுள்ளார். நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார்.