News October 18, 2025

உடல் எடை குறைய காலையில் இந்த Exercise பண்ணுங்க!

image

ஜம்பிங் ஜாக்ஸ் செய்வதால், உடல் எடை குறைவது, இதய ஆரோக்கியமும் மேம்படுவது, தசைகள் & எலும்புகள் வலு பெறுவது போன்ற நன்மைகள் கிடைக்கின்றன ✦செய்முறை: கால்களுக்கு இடையே கொஞ்சம் இடைவேளைவிட்டபடி, கைகளை ஒன்றாக வைத்து நிற்கவும் ✦கால்களை மடக்காமல், நன்கு விரித்து குதிக்கவும் ✦அப்போது, கைகளை தலைக்கு மேல் கொண்டு சேர்க்கவும் ✦பிறகு, பழைய நிலைக்கு திரும்பவும். துவக்கத்தில் 2 செட்களாக 15 விநாடிகள் செய்யலாம்.

Similar News

News October 19, 2025

சாப்பிட்ட உடனே வாக்கிங் செல்லலாமா?

image

சாப்பிட்ட பின் நடப்பது உடல்நலத்துக்கு நல்லது தான். ஆனால், சாப்பிட்ட உடனேயே அதை செய்ய வேண்டாம் என்கின்றனர் டாக்டர்கள். சாப்பிட்டவுடன் நடப்பது வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். அதனால் சாப்பிட்டு குறைந்தது 10 – 15 நிமிடத்துக்கு பின் நடக்கலாம். 30 நிமிடத்துக்கு பின் வாக்கிங் செல்வது ஜீரணத்தை மேம்படுத்துவதுடன் உடல்பருமனை குறைக்கவும் உதவுமாம். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 19, 2025

சாபத்தால் தீபாவளி கொண்டாடாத கிராமம்

image

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இமாச்சலின் சம்மூ கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் தீபாவளியை கொண்டாட தயாரானார். அப்போது இறந்த அவளது கணவரின் உடல் வீட்டிற்கு வர, உடன்கட்டை ஏறினாள். அதற்கு முன்பு, ‘இந்த ஊர் மக்கள் தீபாவளியை கொண்டாடவே முடியாது’ என சாபமிட்டாள். இதன் பிறகு தீபாவளி கொண்டாடியபோதெல்லாம் இறப்பு (அ) பேரழிவு ஏற்பட்டுள்ளது. சாபத்தாலேயே இவ்வாறு நடப்பதாக, இதுவரை அவர்கள் தீபாவளி கொண்டாடவில்லை.

News October 19, 2025

ராசி பலன்கள் (19.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!