News October 18, 2025
ஆப்கானியர்கள் உடனே வெளியே வேண்டும்: பாக்., அமைச்சர்

பாகிஸ்தானில் இருக்கும் ஆப்கானியர்கள் உடனே தங்கள் தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என பாக்., அமைச்சர் கவாஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்கள் நிலத்தின் வளங்கள் தங்களது மக்களுக்கே எனவும், ஆப்கனுடன் இனியும் நட்புறவை நீட்டிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆப்கான் ஆட்சியாளர்கள் இந்தியாவின் மடியில் அமர்ந்து கொண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
இந்திய ரூபாயை மிஞ்சிய ஆப்கன் கரன்சி

ஆப்கானிஸ்தானின் கரன்சி மதிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பைவிட உயர்ந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. தற்போது 1 ஆப்கானி (AFN) = 1.33 ரூபாயாக உயர்ந்துள்ளது. தாலிபன்கள் உறுதியாக கடைப்பிடிக்கும் நாணய கொள்கை தான் இதற்கு முக்கிய காரணமாம். அமெரிக்க டாலர் மற்றும் பாகிஸ்தான் கரன்சிக்கு தடை விதித்ததுடன், அனைத்து பரிவர்த்தனைகளையும் ஆப்கன் கரன்சியிலேயே நடத்துவதை கட்டாயமாக்கி உள்ளதால், ஆப்கன் கரன்சி வலுவாக உள்ளதாம்.
News October 18, 2025
பண மழை கொட்டும் 3 ராசிகள்

தீபாவளிக்கு பிறகு புதன் மற்றும் சுக்கிரன் விருச்சிக ராசியில் இணையவிருப்பதால் லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இது 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தர போகிறது. *விருச்சிகம்: புதிய தொழில், பண வரவு, திருமணம் *சிம்மம்: பொன், பொருள் பெருகும், வருமானம் இரட்டிப்பாகும், குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். *மேஷம்: தொழிலில் முன்னேற்றம், வெளிநாட்டிற்கு பயணம், நிதி ஆதாயங்கள் பெருகும்.
News October 18, 2025
தோனி, ரோஹித் டெஸ்ட் கேப்டன்சி சுமார் தான்: ரவி

MS தோனி, ரோஹித் சர்மா ஆகியோர் சிறந்த கேப்டன்கள் என்பதில் சந்தேகமே இல்லை என்ற ரவி சாஸ்திரி, ஆனால் இருவரது டெஸ்ட் கேப்டன்சியும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று தெரிவித்துள்ளார். இருவருக்கும் சர்வதேச அளவில் ரசிகர்கள் உள்ளதாகவும் கூறினார். ரோஹித் தலைமையில் டெஸ்ட்டில் 12 வெற்றி, 9 தோல்விகளை இந்தியா பெற்றுள்ளது. தோனி கேப்டன்சியில் 27 வெற்றி, 18 தோல்வி, 15 டிராவை இந்தியா கண்டுள்ளது. உங்கள் கருத்து என்ன?