News October 18, 2025

மெஹுல் சோக்‌ஷியை நாடு கடத்த உத்தரவு

image

பல்வேறு வங்கிகளில் ₹13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு, வைர வியாபாரி மெஹுல் சோக்‌ஷி பெல்ஜியம் தப்பி சென்றார். இந்நிலையில் இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அவரை பெல்ஜியம் அரசு கைது செய்தது. இந்நிலையில், இந்தியாவுக்கு அவரை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால் உடனடியாக நாடுகடத்த சாத்தியமில்லை என தெரிகிறது.

Similar News

News December 7, 2025

இப்போதான் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கு: கோலி Open Talk

image

தெ.ஆ., உடனான தொடரில் தான் விளையாடிய விதம் தனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார். கடந்த 2-3 வருடங்களில் தான் இப்படி விளையாடியதே இல்லை என கூறிய அவர், இப்போதுதான் மனதளவில் ஃப்ரீயாக உணர்வதாக கூறியுள்ளார். மேலும், களத்தில் தான் சிறப்பாக பேட்டிங் செய்தது இந்திய அணிக்கு பெரிய உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 7, 2025

ஆவேசத்திற்கு தயாரான சூர்யா!

image

‘ஆவேஷம்’ ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பூஜையில் அவருடன் நாயகி நஸ்ரியா, மலையாள நடிகர் நஸ்லேன் போன்றோரும் கலந்து கொண்டனர். ‘சிங்கம்’ பட சீரிஸுக்கு பிறகு, இந்த படத்தில் மீண்டும் காக்கி உடையை சூர்யா அணியவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தை சூர்யாவே, ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

News December 7, 2025

என்னிடம் எந்த பாட்சாவும் பலிக்காது: CM ஸ்டாலின்

image

மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் பல திட்டங்களை அறிவித்த CM ஸ்டாலின், நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுவதாக பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார். அவர்கள் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், அவற்றை முறியடிப்போம் என்று சூளுரைத்தார். மேலும், ‘இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கிட்ட அவர்கள் பாட்சா எல்லாம் பலிக்காது. எதுவும் எடுபடாது’ என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!