News October 17, 2025
National Roundup: பெங்களூரில் தமிழ் மாணவி கொலை

*பிஹார் தேர்தலில் 48 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. *குளிர் காலத்தில் ஜம்முவும், கோடை காலத்தில் ஸ்ரீநகரும் தலைநகராக செயல்படும் என அம்மாநில CM உமர் அப்துல்லா அறிவிப்பு. *பெங்களூருவில் காதல் விவகாரத்தில் தமிழ் மாணவி கழுத்து அறுத்து கொலை. *சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா – கர்நாடகா இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.
Similar News
News October 18, 2025
யாரை ஏமாற்றுகிறார் CM ஸ்டாலின்? அண்ணாமலை

ஆணவப்படுகொலையை தடுக்க ஆணையம் அமைத்து யாரை ஏமாற்றுகிறார் CM ஸ்டாலின் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியல் & பழங்குடி சமூகத்தினர் மீதான வன்முறை 68% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது திமுக அரசின் நோக்கமாக தெரியவில்லை எனவும் ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை CM வீணடிக்கிறார் எனவும் சாடியுள்ளார்.
News October 18, 2025
தீபாவளி விடுமுறை.. மேலும் ஒரு ஹேப்பி நியூஸ்

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். அனைத்து பேருந்து நிலையங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், பலர் பேருந்து கிடைக்காமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களின் வசதிக்காகவும் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
தீபாவளி ஸ்பெஷல்: சுவையான ராகி அல்வா!

➤தேவையானவை: கேழ்வரகு, நாட்டு சர்க்கரை, தேங்காய் எண்ணெய், முந்திரி, ஏலக்காய் தூள், நெய் ➤செய்முறை: நெய்யில் முந்திரியை வறுத்து கொள்ளவும். அடுத்து, கேழ்வரகில் தண்ணீர் ஊற்றி, மாவு பதத்திற்கு கொண்டு வரவும். பிறகு, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறிக் கொண்டே தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இதில், வறுத்த முந்திரியை சேர்த்தால், சுவையான கேழ்வரகு அல்வா ரெடி. இந்த தீபாவளிக்கு இத பண்ணி அசத்துங்க.