News October 17, 2025
National Roundup: பெங்களூரில் தமிழ் மாணவி கொலை

*பிஹார் தேர்தலில் 48 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. *குளிர் காலத்தில் ஜம்முவும், கோடை காலத்தில் ஸ்ரீநகரும் தலைநகராக செயல்படும் என அம்மாநில CM உமர் அப்துல்லா அறிவிப்பு. *பெங்களூருவில் காதல் விவகாரத்தில் தமிழ் மாணவி கழுத்து அறுத்து கொலை. *சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா – கர்நாடகா இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.
Similar News
News November 8, 2025
இனி பட்டன்போனில் பணம் அனுப்பலாம்!

UPI-ல் பணம் அனுப்ப ஸ்மார்ட்போன் தான் வேண்டும் என்பதில்லை. பட்டன்போனில் கூட UPI மூலம் பணம் அனுப்பலாம். இதற்காக 2022-ல் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய சேவை தான் ‘UPI 123 Pay’. இதில், மிஸ்டு கால் கொடுத்தால் வரும் அழைப்பில் பரிவர்த்தனை மதிப்பு, UPI pin-ஐ வழங்கினால் போதும். இந்த சேவையை சில வங்கிகள் செயல்படுத்தி வரும் நிலையில், IOB-யும் விரைவில் இந்த சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
News November 8, 2025
Operation Pimple: பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் சமீபமாக அதிகரித்து வந்தாலும், இந்திய ராணுவம் அதை தொடர்ந்து தடுத்து வருகிறது. 3 நாள்களுக்கு முன்பு கூட கிஷ்த்வார் பகுதியில் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்நிலையில், குப்வாரா பகுதியில் மீண்டும் ஊடுருவல் முயற்சி அரங்கேறிய நிலையில், Operation Pimple என்ற பெயரில் இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
News November 8, 2025
Diabetes இருந்தால் இனி USA-க்கு விசா கிடையாது!

அமெரிக்காவில் ஏற்கெனவே விசா கிடைப்பதில் பல பிரச்னைகள் உள்ளன. இந்நிலையில், கிரீன் கார்டு பெற அல்லது விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, Diabetes, இதய நோய் போன்ற நீண்ட கால நோய்கள் இருந்தால், அவர்களுக்கு விசா மறுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயுள்ளவர்களால் அமெரிக்க அரசுக்கு நிதிச்சுமை கூடும் எனக்கருதி, டிரம்பின் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


