News October 16, 2025
போட்டோவை வைத்து பாக்.,ஐ ட்ரோல் செய்த இந்தியா

கஜகஸ்தான் மேஜர் ஜெனரல் உடன் இந்திய ராணுவ தளபதி சந்தித்த போட்டோ வெளியானது முதல், இந்தியா பாக்.,ஐ மறைமுகமாக ட்ரோல் செய்ததாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். காரணம், அந்த போட்டோவுக்குள் இருக்கும் போட்டோ, 1971-ல் அப்போதைய பாக்., ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாஸி, இந்திய ராணுவத்திடம் 93,000 படைவீரர்களோடு சரணடைந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை குறிக்கிறது. இதன் பிறகே வங்கதேசம் நாடு உருவானது.
Similar News
News October 17, 2025
நீயா நானாவிற்கு தடை கோரி மனு

சமீபத்தில் வெளியான ‘நீயா நானா’ தெரு நாய்கள் எபிசோட் வைரலானது. இதனால் தெருநாய்கள் கொல்லப்படுவதாகவும், டிவி விவாத நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பிரகாஷ் காந்த் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். பொதுமேடையில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததில் தவறில்லை. விவாத நிகழ்ச்சிக்கு எப்படி தடை விதிக்க முடியும் என்பதை மனுதாரர் விளக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
News October 17, 2025
கடவுளுக்கு பிரசாதம் படைக்கும் போது இவற்றை மறக்காதீர்கள்..

வேண்டுதலுக்கு பிறகு பிரசாதத்தை கடவுளுக்கு நிவேதனம் செய்ய சில விதி முறைகள் உள்ளன ◆எண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயன்படுத்தலாம் ◆விஷ்ணு அவதாரங்களை வழிபடும் போது துளசியையும், விநாயகருக்கு அருகம்புல்லும், சிவபெருமானுக்கு வில்வமும் சமர்பிக்க வேண்டும் ◆கடவுளுக்கு பிரசாதம் படைத்துவிட்டு உடனடியாக எடுக்கக் கூடாது. காகத்திற்கு வழங்கிய பிறகே, அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். SHARE IT.
News October 17, 2025
உலகின் தூய்மையான நகரங்கள் இவை தான்

சுத்தமான தெருக்கள், தூய்மையான காற்று, நிலைத்த வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உலகின் சுத்தமான நகரங்கள் பட்டியலிடப்படுகின்றன. இப்பட்டியலில் உள்ள நகரங்களில் நவீன கழிவு மேலாண்மை, கடுமையான மாசு கட்டுப்பாட்டு விதிகள், பசுமையான உட்கட்டமைப்புகளுக்கான முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் உலகின் டாப் 10 தூய்மையான நகரங்களை மேலே தொகுத்துள்ளோம். அதை Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.