News October 16, 2025
12வது போதும்.. RRB-ல் 2424 காலியிடங்கள்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2424 Commercial – Ticket Clerk பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12வது தேர்ச்சி பெற்ற 18- 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 4 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு ₹21,700 சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 21-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
Similar News
News October 17, 2025
National Roundup: பெங்களூரில் தமிழ் மாணவி கொலை

*பிஹார் தேர்தலில் 48 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. *குளிர் காலத்தில் ஜம்முவும், கோடை காலத்தில் ஸ்ரீநகரும் தலைநகராக செயல்படும் என அம்மாநில CM உமர் அப்துல்லா அறிவிப்பு. *பெங்களூருவில் காதல் விவகாரத்தில் தமிழ் மாணவி கழுத்து அறுத்து கொலை. *சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா – கர்நாடகா இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.
News October 17, 2025
அக்டோபர் 17: வரலாற்றில் இன்று

*உலக வறுமை ஒழிப்பு நாள். *1892 – சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் பிறந்தநாள். *1933 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நாஜி ஜெர்மனியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார். *1970 – அனில் கும்ப்ளே பிறந்தநாள். *1979 – அன்னை தெரேசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. *1981 – கவிஞர் கண்ணதாசன் இறந்தநாள். *1992 – நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள்.
News October 17, 2025
NDA கூட்டணி CM வேட்பாளர் நிதிஷ் இல்லையா?

பிஹாரில் தேர்தல் முடிந்த பிறகே CM யார் என்பதை கூட்டணி கட்சிகள் முடிவு செய்யும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். நிதிஷ்குமார் தான் CM வேட்பாளர் என்பதை உறுதி செய்ய தனக்கு அதிகாரம் இல்லை எனவும், தற்போதைக்கு அவரது தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் அமித்ஷா கூறியுள்ளார். மேலும், கடந்த முறை சீனியாரிட்டி, மரியாதைக்காக நிதிஷ்குமார் CM-ஆக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.