News October 16, 2025
ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்று (அக்.16) வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 367 புள்ளிகள் உயர்ந்து 82,972 புள்ளிகளிலும், நிஃப்டி 109.10 புள்ளிகள் அதிகரித்து 25,433 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. ITI, Whirlpool, Titan ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் உள்ள நிலையில், HDFC Life Insurace உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன.
Similar News
News October 16, 2025
‘அம்மா SORRY.. நான் சாகப்போறேன்’

‘அம்மா நான் சாகப்போகிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை. என்னை மன்னித்துவிடு’. கேரளாவில் நர்சிங் மாணவி மஹிமா(20) தற்கொலைக்கு முன் எழுதிய வரிகள் இவை. வீட்டில் தூக்கில் தொங்கிய அவரது உடலை மீட்டு ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றபோது, அந்த வாகனம் விபத்தில் சிக்கியது பெரும் சோகம். இதில், காயமடைந்த மஹிமாவின் தாய், சகோதரர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News October 16, 2025
BREAKING: ரஜினியுடன் இரவில் திடீர் சந்திப்பு

சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்வர் OPS நேரில் சந்தித்து பேசியுள்ளார். அவருடன் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் இருந்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே எனவும் ரஜினிக்கு OPS தீபாவளி வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. NDA கூட்டணியில் இருந்து அண்மையில் OPS வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
News October 16, 2025
ஒற்றைத் தலைவலியை குறைக்க உதவும் பானம்

ஒரு பாத்திரத்தில் 300 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். அதில் மிளகு, இடித்த இஞ்சி சேர்த்து கொள்ளுங்கள். இஞ்சி நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதித்த பிறகு, அதில் மஞ்சள் பொடியை சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
கொஞ்சம் வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பிறகு அதில் எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ளுங்கள்.
நன்கு கலந்து சூடாக அப்படியே குடித்துப் பாருங்கள். உங்கள் ஒற்றைத் தலைவலி குறைய ஆரம்பிக்கும்.