News October 13, 2025
43 ஆண்டுகளாக அதிபராக இருப்பவர்… மீண்டும் போட்டி

கேமரூன் நாட்டின் அதிபர் பவுல் பியா 8-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? 92 வயதான அவர் 1982 முதல் அந்நாட்டின் அதிபராக இருக்கும் நிலையில் மீண்டும் களமிறங்குகிறார். ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு இரண்டே அதிபர்கள் தான் இருந்துள்ளனர். 1960-82 வரை அஹ்மத் அஹிட்ஜோ, அடுத்து பவுல் பியா. இன்று நடைபெறும் தேர்தலில் பியா வென்றால் மேலும் 7 ஆண்டுகளுக்கு அதிபராக இருப்பார்.
Similar News
News October 13, 2025
அக்டோபர் 13: வரலாற்றில் இன்று

*பன்னாட்டு இயற்கை பேரிடர் குறைப்பு நாள். *1792 – வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. *1884 – சர்வதேச நேரம் கணிக்கும் இடமாக லண்டனில் உள்ள கிரீன்விச் தெரிவு செய்யப்பட்டது. *1923 – துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது. *1956- தமிழ்நாடு என பெயர் வைக்க போராடி உயிர்நீத்த சங்கரலிங்கனார் இறந்த நாள். *1990 – தென்னிந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாள்.
News October 13, 2025
‘பாகுபலி 1’ வாழ்நாள் வசூலை முந்திய ‘காந்தாரா சாப்டர் 1’

‘காந்தாரா சாப்டர் 1’ படம் உலகம் முழுவதும் ₹590 கோடி வசூல் செய்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் ₹435.59 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், ‘பாகுபலி 1’ மற்றும் ‘சலார்’ படங்களின் வாழ்நாள் நிகர வசூலை அப்படம் முந்தியுள்ளது. ‘பாகுபலி 1’ படம் இந்தியாவில் ₹420 கோடியும், ‘சலார் 1’ படம் ₹406.45 கோடியும் நிகர வசூலாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
News October 13, 2025
RSS நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்க கோரிக்கை

கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளிகள், கோயில்களில் RSS நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்க CM சித்தராமையாவை வலியுறுத்தியுள்ளதாக அம்மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். இளம் வயதினரை RSS மூளைச்சலவை செய்கிறது. அந்த அமைப்பின் தத்துவங்கள் நல்லவையாக இருந்தால் பாஜக தலைவரின் குழந்தைகள் ஏன் பின்பற்றுவதில்லை. அரசியலமைப்பிற்கு எதிரான தத்துவத்தை இளம் வயதினரிடையே பரப்புவதாகவும் அவர் சாடியுள்ளார்.