News October 13, 2025
43 ஆண்டுகளாக அதிபராக இருப்பவர்… மீண்டும் போட்டி

கேமரூன் நாட்டின் அதிபர் பவுல் பியா 8-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? 92 வயதான அவர் 1982 முதல் அந்நாட்டின் அதிபராக இருக்கும் நிலையில் மீண்டும் களமிறங்குகிறார். ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு இரண்டே அதிபர்கள் தான் இருந்துள்ளனர். 1960-82 வரை அஹ்மத் அஹிட்ஜோ, அடுத்து பவுல் பியா. இன்று நடைபெறும் தேர்தலில் பியா வென்றால் மேலும் 7 ஆண்டுகளுக்கு அதிபராக இருப்பார்.
Similar News
News December 15, 2025
இனி தனியாரும் அணுமின் நிலையங்களை நடத்தலாம்!

அணுமின் உற்பத்தி துறையை தனியாருக்கு திறந்துவிடும் SHANTI மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம், சிறிய அளவிலான அணுமின் நிலையங்களை நிறுவ தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல், அரசின் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்தும் தனியார் நிறுவனங்கள் செயல்படலாம். நாட்டில் அமைக்கப்பட உள்ள தரவு மையங்களுக்கு அதிகளவு மின்சாரம் தேவை என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
BREAKING: திமுகவில் கூண்டோடு ராஜினாமா

கோவை, விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அங்குள்ள 9-வது வட்டச் செயலாளர் மயில்சாமி தலைமையில் 75-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தனிப்பட்ட காரணங்களுக்காக திமுகவில் இருந்து விலகியது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொங்கு பகுதியில் திமுகவை பலப்படுத்தும் முயற்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.
News December 15, 2025
IND vs SA: அக்சர் படேல் அணியில் இருந்து விடுவிப்பு

உடல்நிலை சரியில்லாத காரணத்தால், SA-க்கு எதிரான டி20 தொடரில் இருந்து அக்சர் படேல் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஷெபாஷ் அகமது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இந்தியா 2 போட்டிகளிலும், SA ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சியிருக்கும் 2 போட்டிகள் வரும் 17 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.


