News October 12, 2025
தீவிரவாதிகளின் புகலிடமாக பாக்., உள்ளது: தாலிபன் அரசு

ஆப்கன் அமைச்சர் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில், பாக்., – ஆப்கன் இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் இருநாட்டு தரப்பிலும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பாக்.,கின் கைபர் பக்துன்வா, பலூசிஸ்தான் மாகாணங்களில் ISIS தீவிரவாத மையங்கள் செயல்படுவதாக தாலிபன் அரசு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளின் புகலிடமாக பாக்., உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News October 13, 2025
IPL-ல் இருந்து ஓய்வு பெறும் கோலி?

IPL-ல் இருந்து கோலி விரைவில் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. RCB அணியுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ள முன்னணி பிராண்ட் ஒன்று, கோலியை விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்ய அணுகியுள்ளதாம். ஆனால், பிற வீரர்களுக்கு அந்த ஒப்பந்தத்தை கொடுக்க அவர் அறிவுறுத்தினாராம். அடுத்த மெகா ஏலம் நடக்கும் போது அவருக்கு 38 வயதாகியிருக்கும். இதனால், இன்னும் 2 சீசன்களில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
News October 13, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 13, புரட்டாசி 27 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM -7:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 PM – 12:00 PM ▶குளிகை: 1:30 AM – 3:00 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை
News October 13, 2025
திமுகவுக்கு முகூர்த்த தேதி குறிச்சாச்சு: நயினார்

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட இன்று முகூர்த்த நாள் குறிக்கப்பட்டு விட்டதாக நயினார் சூளுரைத்துள்ளார். திமுக ஆட்சியின் முடிவுக்கு EPS முன்னுரை எழுத, BJP முடிவுரை எழுதும் என்றும் சபதமேற்றார். திமுக ஆட்சிக்கு முடிவெழுத 177 நாள்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், திமுகவினர் தமிழை விற்று பிழைத்தவர்கள் என்று காட்டமாக விமர்சித்தார். மேலும், BJP – ADMK கூட்டணி இயற்கையான கூட்டணி என்றும் நயினார் தெரிவித்தார்.