News October 12, 2025
தீபாவளிக்கு இதை செய்தால் கண்டிப்பா ஜெயில்தான்!

தீபாவளி கொண்டாட்டத்தின் போது வேண்டுமென்றே விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்காதீங்க. அத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இது குறித்து புகாரளிக்கவும், காயமடைந்த விலங்குகளுக்கு சிகிச்சையளிக்கவும் ‘1962’ என்ற நம்பருக்கு அழைக்கலாம். எனவே எந்த ஜீவனுக்கும் இடையூறு செய்யாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள். SHARE.
Similar News
News October 12, 2025
இந்திய வீராங்கனைகளுக்கு பெருமை சேர்ந்த ஆந்திரா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய முன்னாள் கேப்டன் மித்தாலியை ஆந்திர மாநில அரசு கௌரவித்துள்ளது. இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டியின் போது அவரது பெயரில் கேலரி ஒன்று திறக்கப்பட்டது.
அதேபோல் விக்கெட் கீப்பர் ரவி கல்பனா பெயரும் ஒரு கேலரிக்கு சூட்டப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.
News October 12, 2025
ஒரு முறை மட்டுமே… அது எது?

`ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா’ என்று காதலை கவிஞர்கள் வர்ணித்தாலும், காதலும் பலமுறை மலரலாம். ஆனால், சில பொருள்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இரண்டாம் முறை என்பது சாத்தியமே இல்லை அல்லது பயன்படுத்தவே கூடாது. அப்படிப்பட்ட பொருள்களில் சிலவற்றை மேலே உள்ள படங்களில் காணலாம். உங்களுக்கு தெரிந்த, ஒருமுறை மட்டுமே பயன்படும் பொருள்களை கமெண்ட்டில் சொல்லுங்களேன்.
News October 12, 2025
‘அம்மா SORRY.. நான் சாகப்போறேன்’

‘நான் தவறு செய்து ஒருவருக்கு மிகுந்த வலியை கொடுத்துவிட்டேன். என் தவறு மன்னிக்க முடியாதது. அம்மா என்னை மன்னித்துவிடு. நான் இப்போது கிளம்புகிறேன்’. உ.பி.,யில் இளைஞர் ஷிஷிர் பதக்கின் கடைசி வரிகள் இவை. காட்டுப் பகுதிக்குச் சென்று துப்பாக்கியால் சுட்டு அவர் தற்கொலை செய்துள்ளார். இளைஞரின் விபரீத முடிவுக்கு காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.