News October 12, 2025
மதுரையில் பிரசார பயணத்தை தொடங்குகிறார் நயினார்

மதுரையில் இன்று தனது முதல்கட்ட பிரசார பயணத்தை நயினார் நாகேந்திரன் தொடங்குகிறார். அண்ணாநகர் பகுதியில் நடைபெறும் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ தொடக்க நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும், கர்ப்பிணிகள் பங்கேற்க கூடாது உள்ளிட்ட 15-க்கும் அதிகமான நிபந்தனைகளை நயினாரின் பரப்புரைக்கு மதுரை போலீஸ் விதித்துள்ளது.
Similar News
News October 12, 2025
பிரபல நடிகை டயான் கீட்டன் காலமானார்.. குவியும் இரங்கல்

ஹாலிவுட் நடிகை டயான் கீட்டன்(79) காலமானார். உலகம் முழுவதும் பிரபலமான தி காட்பாதர், தி காட்பாதர்-2, அனி ஹால் உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதில், தி காட்பாதர்(1978), அனி ஹால்(1977) படங்களுக்கு ஆஸ்கர் விருது வென்று உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்தார். சிறந்த நடிகைக்கான அகாடமி விருது, எம்மி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News October 12, 2025
மே.வங்க வன்கொடுமை வழக்கு: 3 பேர் கைது

மே.வங்கம், துர்காபூரில் ஒடிசாவை சேர்ந்த மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள், ஆளும் திரிணாமுல் காங்., அரசை சாடி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு துணை நிற்கும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதனிடையே, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி வலியுறுத்தி உள்ளார்.
News October 12, 2025
கரூர் சம்பவத்துக்கு இவர்தான் காரணம்: நயினார்

கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்பது நாட்டுக்கே தெரியும் என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ₹10 லட்சம் நிவாரணம், ஆனால் சாதாரண விபத்தில் இறந்தால் ₹2 லட்சம் மட்டும்தான். இது என்ன ஆட்சி எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், NDA ஆட்சி அமையும்போது இவை அனைத்துக்கும் திமுக பதில் சொல்ல வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.