News October 12, 2025

மதுரையில் பிரசார பயணத்தை தொடங்குகிறார் நயினார்

image

மதுரையில் இன்று தனது முதல்கட்ட பிரசார பயணத்தை நயினார் நாகேந்திரன் தொடங்குகிறார். அண்ணாநகர் பகுதியில் நடைபெறும் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ தொடக்க நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும், கர்ப்பிணிகள் பங்கேற்க கூடாது உள்ளிட்ட 15-க்கும் அதிகமான நிபந்தனைகளை நயினாரின் பரப்புரைக்கு மதுரை போலீஸ் விதித்துள்ளது.

Similar News

News December 15, 2025

பரிதாப நிலையில் பிரபல தமிழ் நடிகை (PHOTO)

image

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோருடன் காமெடியில் கலக்கிய நடிகை வாசுகி தற்போது ஆந்திராவில் முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். மக்களை சிரிப்பில் ஆழ்த்திய அவர், உடல் நலிவுற்று பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவது பெரும் சோகம். ஆந்திர DCM பவன் கல்யாண், நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் வாசுகிக்கு ₹4 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். நடிகர் சங்கத்திடமும் அவர் உதவி கோரியுள்ளார்.

News December 15, 2025

அஜித் குமார் மரணம்.. பரபரப்பான புதிய தகவல்

image

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், 6 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 7-வது குற்றவாளியாக மானாமதுரை DSP சண்முக சுந்தரம் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், SI சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், குற்றஞ்சாட்டப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.

News December 15, 2025

காட்டில் வலம் வந்த மாளவிகா

image

தடோபா-அந்தாரி புலிகள் காப்பகக் காட்டில் சவாரி சென்று மகிழ்ந்த மாளவிகா மோகனன், அதன் போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதில், அவர் கேமராவுடன் வலம் வந்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார். திரைப்பட கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தைரியமான, தனித்துவமான பெண்ணாக வலம் வருகிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!