News October 12, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை

அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க..
Similar News
News October 12, 2025
புடினுக்கு நன்றி சொன்ன டிரம்ப்

USA அதிபர் டிரம்ப் உலகில் அமைதியை வளர்க்க முயற்சி மேற்கொண்டதாகவும், பல சிக்கலான விஷயங்களை தீர்த்து வைத்திருப்பதாகவும் ரஷ்ய அதிபர் புடின் கூறியிருந்தார். இந்நிலையில், அதிபர் புடினின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த டிரம்ப், இப்பணி தொடரும் எனவும் கூறியுள்ளார். எப்போதும் எலியும், பூனையுமாய் இருக்கும் இருநாடுகளின் அதிபர்கள் இவ்விவகாரத்தில் இணக்கம் காட்டியிருப்பது உலக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
News October 12, 2025
சளி, இருமலை போக்க இந்த மூலிகை தேநீர்தான் பெஸ்ட்!

கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி டீ தூள் போட்டு கொதிக்க வையுங்கள். பின் கற்பூரவள்ளி இலைகளை சேருங்கள். அதில் தோல் நீக்கிய இஞ்சி (சிறு)துண்டுகள், மிளகு மற்றும் ஏலக்காயை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின் அதை வடிகட்டிக்கொள்ளவும். மிதமான சூட்டில், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடியுங்கள். இது சளி, இருமலுக்கு சிறந்த நிவாரணமாகும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News October 12, 2025
‘அதிமுகவுடன் விஜய் கூட்டணி இல்லை’

அதிமுக கூட்டணிக்கு விஜய் ஒருபோதும் செல்ல மாட்டார் என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். ‘அதோ பாருங்கள் கொடி’ என தவெக கொடியை காண்பித்து இபிஎஸ் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டிய அவர், சொந்த கட்சிக்காரர்களை (அதிமுகவினர்) அடுத்த கட்சியின் கொடியை பிடிக்க செய்யும் அவமானம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளதாக சாடினார். இபிஎஸ் இருக்கும் வரை விஜய் கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை என்றார்.