News October 11, 2025

இரட்டை சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால்!

image

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய ஓப்பனர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ரன்கள் குவித்து அவுட்டாகினார். அவரை டகிநரைன் சந்தர்பால் ரன் அவுட் செய்தார். 258 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால், 22 பவுண்டரிகளை விளாசினார். 3-வது இரட்டை சதத்தை தவற விட்டாலும், இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வாலின் 3-வது அதிகபட்ச ஸ்கோராகும். 2-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா 329/3 ரன்களை குவித்துள்ளது.

Similar News

News October 11, 2025

அடிக்கடி பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள்? எச்சரிக்கை!

image

சிலர் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவர், சிலர் பசியெடுத்தாலோ போரடித்தாலோ பிஸ்கட் கொறிப்பார்கள். ஆனால், அதிகம் பிஸ்கட் சாப்பிடுவதால் உங்கள் உடல்நிலை பாதிக்கும் என்பது தெரியுமா? பிஸ்கட் தயாரிக்க மைதா, பாமாயில், சர்க்கரை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது இதய நோய்கள், BP, ஸ்ட்ரோக், உடல்பருமன், நீரிழிவு உள்பட பல பாதிப்புகள் உருவாக காரணமாகிறது. ஆகவே, அதிகம் பிஸ்கட் சாப்பிடுவதை தவிருங்கள்.

News October 11, 2025

BREAKING: நடிகர் ரஜினி வீட்டில் இரவில் பரபரப்பு

image

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, தேனாம்பேட்டை போலீஸார் அவரது வீட்டிற்கு விரைந்தனர். மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் வீடு முழுவதும் சோதனையிட்டனர். இதனையடுத்து, அது வெறும் புரளி என தெரியவந்தது. விஜய், கமல் வீடுகளுக்கும் அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

News October 11, 2025

தூங்கும் உலகில் தூங்காத நகரங்கள் PHOTOS

image

உலகின் பல நாடுகளில் இரவில் ஜொலிக்கும் தூங்கா நகரங்கள் உள்ளன. உணவகம், போக்குவரத்து, வர்த்தகம் என அனைத்தும் இரவில் இயங்கும். வேலைவாய்ப்பு, சுற்றுலா, நவீன வாழ்க்கைமுறை ஆகியவையே தூங்கா நகரங்களின் முக்கிய காரணிகளாக இருந்து வருகின்றன. மேலே, சில பிரபல நகரங்களின் பட்டியலை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த நகரம் எது?

error: Content is protected !!