News October 11, 2025
இரட்டை சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய ஓப்பனர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ரன்கள் குவித்து அவுட்டாகினார். அவரை டகிநரைன் சந்தர்பால் ரன் அவுட் செய்தார். 258 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால், 22 பவுண்டரிகளை விளாசினார். 3-வது இரட்டை சதத்தை தவற விட்டாலும், இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வாலின் 3-வது அதிகபட்ச ஸ்கோராகும். 2-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா 329/3 ரன்களை குவித்துள்ளது.
Similar News
News December 14, 2025
சற்று நேரத்தில் அறிவிக்கிறார் விஜய்

தவெகவில் ஒரு சில தொகுதிகளின் வேட்பாளர்கள் இன்று(டிச.14) வெளியிடப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்திய நிலையில், 70% பட்டியலை அவர் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. திருச்செங்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் முன்னிலையில் காணொலி காட்சி வாயிலாக வேட்பாளர்களை விஜய் அறிவிக்க உள்ளாராம்.
News December 14, 2025
நான் எந்த தவறையும் செய்ய மாட்டேன்: கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு ₹1020 கோடி ஊழல் செய்ததாக வெளியான செய்தி, தமிழக அரசியலில் பெரும் நெருப்பாக பற்றி எரிகிறது. இந்நிலையில், நான் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், நேருவை குறிவைத்து அடித்தால், இந்த பகுதியில் (திருச்சி) திமுகவை அடிக்கலாம் என்ற நோக்கத்தோடு பாஜகவினர் வேலை செய்கிறார்கள் எனக் கூறிய அவர், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், எந்தத் தவறையும் செய்யமாட்டேன் என்றார்.
News December 14, 2025
கர்நாடக காங்., பஞ்சாயத்துக்கு இன்றோடு முற்றுப்புள்ளியா?

கர்நாடகா CM பதவிக்கான பஞ்சாயத்தில் ஏற்கெனவே தங்களுக்குள் <<18420626>>எந்த பிரச்னையும் இல்லை<<>> என CM சித்தராமையா, DCM டிகே சிவகுமார் தெரிவித்தனர். இருப்பினும் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் எனவும் கூறியிருந்தனர். இந்நிலையில், இன்று டெல்லியில் சோனியா காந்தியை இருவரும் சந்திக்க உள்ளனர். இதன் மூலம் கர்நாடக காங்.,-ல் நிலவி வரும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


