News October 11, 2025
பெண்கள் வேலை செய்ய விரும்பும் மாநிலங்கள்

சர்வதேச கல்வி மற்றும் திறனை அடையாளம் காணும், ‘விபாக்ஸ்’ அமைப்பு, நம் நாட்டின் திறன்கள் – 2025 அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், நம் நாட்டில் பெண்களின் வேலைவாய்ப்பு குறித்த ஆய்வு முடிவுகளும் இடம்பெற்றுள்ளன. பெண்கள் பணிபுரிய அதிகம் விரும்பும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் எது? தமிழகம் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பன குறித்து Swipe தெரிந்துகொள்ளுங்கள்.
Similar News
News October 11, 2025
மலிவு விலையில் 350cc பைக்குகள்

ஜிஎஸ்டி குறைப்பால் 350cc மற்றும் அதற்கு குறைவான பைக்குகளின் விலை சரிந்தது. 350cc பைக்குகள், ராயல் லுக், கிளாசிக் வடிவமைப்பு, இன்ஜின் சவுண்ட், அதிக திறன் என முழுமையான ஒரு ரைடு அனுபவத்தை தருகிறது. இதனால், பலருக்கும் இதன்மீது மோகம் உண்டு. தற்போது மலிவு விலையில் கிடைக்கும் 350cc பைக்குகள் என்ன என்று, மேலே போட்டோக்களாக உள்ளன. இதில் உங்களுக்கு பிடித்த பைக் எது? கமெண்ட் பண்ணுங்க.
News October 11, 2025
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை உயர்கிறது: CM ஸ்டாலின்

தங்கம் விலை ஒரு நாளைக்கு 2 முறை ராக்கெட் வேகத்தில் உயர்வதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைமாமணி விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், தங்கத்தை விட தமிழக அரசு வழங்கும் தங்கப் பதக்கத்துக்கு மதிப்பு அதிகம் என்று கூறினார். விருது அறிவிக்கும் போது இருந்த தங்கத்தின் விலையை விட, அதை வழங்கும்போது அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்விருது பெறுபவர்களுக்கு 3 சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும்.
News October 11, 2025
TVK மா.செயலாளருக்கு அக்.14 வரை நீதிமன்ற காவல்

TVK கரூர் மா.செயலாளர் மதியழகனை அக்.14 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. TVK கூட்ட நெரிசலில் ஏற்பட்ட பலி தொடர்பாக மதியழகன் கைது செய்யப்பட்டார். கடந்த 30-ம் தேதி முதல் நீதிமன்ற காவலில் இருந்த அவர், 2 நாள் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை காவலில் இருந்தார். விசாரணை காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.