News October 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 485 ▶குறள்: காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். ▶பொருள்: பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.
Similar News
News October 11, 2025
அதிகமாக தண்ணீர் குடித்தாலும் ஆபத்தா?

அதிகமாக தண்ணீர் குடிப்பதும், உடல் நலத்திற்கு தீங்கானது என ICMR ஆய்வில் தெரியவந்துள்ளது *அதிகளவு தண்ணீரை வெளியேற்ற முடியாமல், சிறுநீரகம் அழுத்தத்திற்கு ஆளாகிறது *அதிகமாக தண்ணீர் வெளியேறுவதால், ஹார்மோன் எதிர்வினை நிகழ்ந்து, உடல் சோர்வடைகிறது *அதிக தண்ணீர் வெளியேறுவதால், உடலில் உள்ள சோடியம் & பிற எலக்ட்ரோலைட்டுகளை நீர்த்துப்போகும். ஒரு நாளில், 3- 3.5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். SHARE IT.
News October 11, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹680 குறைந்த நிலையில், இன்று(அக்.11) ₹680 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,425-க்கும், சவரன் ₹91,400-க்கு விற்பனையாகிறது.
News October 11, 2025
பெண்கள் வேலை செய்ய விரும்பும் மாநிலங்கள்

சர்வதேச கல்வி மற்றும் திறனை அடையாளம் காணும், ‘விபாக்ஸ்’ அமைப்பு, நம் நாட்டின் திறன்கள் – 2025 அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், நம் நாட்டில் பெண்களின் வேலைவாய்ப்பு குறித்த ஆய்வு முடிவுகளும் இடம்பெற்றுள்ளன. பெண்கள் பணிபுரிய அதிகம் விரும்பும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் எது? தமிழகம் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பன குறித்து Swipe தெரிந்துகொள்ளுங்கள்.