News October 10, 2025

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.10) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,320 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,260-க்கும், சவரன் ₹90,080-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக தாறுமாறாக அதிகரித்து வந்த நிலையில், திடீர் சரிவைக் கண்டுள்ளது. கடந்த 9 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹4,200 அதிகரித்திருந்தது கவனிக்கத்தக்கது.

Similar News

News October 10, 2025

அதிகம் விற்பனையான 10 கார்கள்

image

வரி குறைப்பு மற்றும் நவராத்திரி பண்டிகை என செப்டம்பரில் கார் விற்பனை களைகட்டியது. எந்தெந்த கார்கள், எவ்வளவு விற்பனையாகின என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டாப் 10-யில் இடம்பிடித்துள்ள கார்கள் மற்றும் அதன் விற்பனை விவரத்தை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. உங்களுக்கு பிடித்த கார் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 10, 2025

அடங்காத அழுகுரல்.. 30 பேரை கொன்ற இஸ்ரேல்

image

டிரம்ப்பின் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலும், ஹமாஸும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த பின்னர், இதுவரை 30 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளதாக பாலஸ்தீன் தெரிவித்துள்ளது. ஆனால், ஹமாஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டதால், தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது வெறும் கண்துடைப்பு நாடகம் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News October 10, 2025

20 வயது காதலியை கர்ப்பமாக்கிய 80 வயது தாத்தா

image

காதலுக்கு கண்ணுமில்லை, வயதுமில்லை என்ற கேப்ஷனுடன் SM-ல் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. 80 வயது முதியவர் ஃபிராங்குக்குள் ஆழமான காதலை கண்டுகொண்ட 20 வயது ஜெசிகா, தானும் அவரை காதலிக்க தொடங்கினார். ஊரார் பேச்சை உதாசீனப்படுத்தி காதலில் திளைத்த இந்த ஜோடிக்கு, இப்போது குழந்தை பிறக்கப் போகிறதாம். குழந்தையுடன் காதலின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் தம்பதியர். வாழ்த்தலாமே!

error: Content is protected !!