News October 9, 2025
பிரிட்டனிடம் ₹4,156 கோடிக்கு ஆயுதம் வாங்கும் இந்தியா

UK பிரதமர் கியர் ஸ்டார்மர் இந்தியா வந்துள்ள நிலையில், இருநாடுகளுக்கு இடையே வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. குறிப்பாக ₹4,156 கோடிக்கு இலகுரக ஏவுகணைகளை இந்தியா இறக்குமதி செய்யும். இதனால் அயர்லாந்தில் உள்ள ஏவுகணை தொழிற்சாலையில் 700 பேருக்கு வேலை உறுதியாகுமாம். இந்நிலையில், மேக்-இன் இந்தியா என்று சொல்லிவிட்டு இலகு ரக ஆயுதங்களை கூட பிரிட்டனிடம் வாங்குவது ஏன் என SM-ல் பலர் கமெண்ட் செய்கின்றனர்.
Similar News
News October 10, 2025
IND Vs WI: இந்தியாவின் பிளேயிங் XI இதுதான்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில், பிளேயிங் XI எந்த மாற்றமும் இல்லாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளேயிங் XI: *கில் *கே.எல்.ராகுல் *ஜெய்ஸ்வால் *சாய் சுதர்சன் *துருவ் ஜுரெல் *ரவீந்திர ஜடேஜா *வாசிங்டன் சுந்தர் *நிதிஷ்குமார் ரெட்டி *குல்தீப் யாதவ் *ஜஸ்பிரித் பும்ரா *முகமது சிராஜ். இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
News October 10, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.10) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,320 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,260-க்கும், சவரன் ₹90,080-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக தாறுமாறாக அதிகரித்து வந்த நிலையில், திடீர் சரிவைக் கண்டுள்ளது. கடந்த 9 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹4,200 அதிகரித்திருந்தது கவனிக்கத்தக்கது.
News October 10, 2025
Live-In உறவில் பெண்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவர்

Live-In ரிலேசன்ஷிப் தற்போது டிரெண்ட்டாக இருப்பதாக உ.பி. கவர்னர் ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளார். Live-In ரிலேசன்ஷிப்பினால் இப்போதுள்ள இளம்பெண்கள் 15-20 வயதில் குழந்தை பெறுவதாகவும், இதை பார்க்கும்போது வேதனையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், Live-In உறவில் இருந்து பெண்கள் விலகியிருக்க வேண்டும், இல்லையென்றால் 50 துண்டுகளாக வெட்டப்பட்டு கொல்லப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.