News October 9, 2025

ஒரு கடிதம் எழுதினேன், அதை உனக்கு அனுப்பினேன்..

image

‘நலம் நலம் அறிய ஆவல்’, ‘பதில் கடிதம் கிடைக்கும் வரை காலமெல்லாம் காத்திருப்பேன்’, ‘அண்ணன்கிட்ட இருந்து கடுதாசி வந்துருச்சி’ போன்ற சொல்லாடல்களை கடந்த 2 தசாப்தங்களாக கேட்பது குறைந்திருக்கலாம். ஆனால், இந்த அழகிய தொடர்பியலை தாண்டியே நம் வாழ்க்கை பயணத்திருக்கும். உணர்வுகளை வார்த்தைகளால் கொட்டித் தீர்த்த கடிதங்களுக்காக இன்று ‘உலக தபால் தினம்’ கொண்டாடப்படுகிறது. உங்களுக்கு மறக்க முடியாத கடிதம் எது?

Similar News

News October 10, 2025

CM ஸ்டாலினுக்கு திறமை இல்லை: EPS

image

திமுக ஆட்சியில், குடிநீரில் மலம் கலக்கும் கொடுமையான செயல் நடப்பதாக EPS விமர்சனம் செய்துள்ளார். கையாலாகாத அரசு ஆட்சி செய்வதால் தான் வேங்கைவயலில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய EPS, அந்த பிரச்னை தீர்வதற்குள் தற்போது சோழவந்தான் பகுதியில் உள்ள நீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். இவற்றையெல்லாம் தீர்க்க கூடிய திறமை CM-க்கு திறமை இல்லை என்றும் அவர் சாடினார்.

News October 10, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 10, புரட்டாசி 24 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 01:45 AM – 2:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை

News October 10, 2025

Cinema Roundup: ரீ-ரிலீசாகும் அஞ்சான்

image

சூர்யாவின் ‘அஞ்சான்’ படம் விரைவில் ரீ-ரிலீசாகும் என அறிவிப்பு. *கிஷென் தாஸின் ‘ஆரோமலே’ படம் நவம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. *விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு தேசிய விருது வென்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்கவுள்ளார். *ஜி.வி.பிரகாஷின் ‘மெண்டல் மனதில்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. *மகேஷ் பாபுவின் SSMB29 அதிகாரப்பூர்வ டைட்டில் நவ.16-ல் வெளியாகும் என தகவல்.

error: Content is protected !!