News April 15, 2024
பல்லடம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தமிழகத்தை உலுக்கிய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023 செப்.3ஆம் தேதி பல்லடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் செல்லமுத்து, வெங்கடேஷ், சோனை முத்தையா, அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனையும், செல்வம் என்பவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
சைவ வழிபாட்டில் மஞ்சள், குங்குமம் இல்லாததன் காரணம்!

சிவ வழிபாட்டில் சந்தனம், விபூதி, வில்வ இலை பிரசாதங்கள் அளிக்கப்படும் . ஆனால், மஞ்சள், & குங்குமம் வழங்கப்படாது. சிவன் முற்றிலும் துறந்தவராக கருதப்படுவதால், அழகின் அடையாளமான குங்குமம் அளிக்கப்படுவதில்லை. அதே போல, மஞ்சளில் இருந்துதான் குங்குமம் தயாரிக்கப்படுகிறது. சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றாலும், அதனை பிரசாதமாக கொடுத்தால், அவர் கோவப்படுவார் என்பதால், மஞ்சளும் அளிக்கப்படுவதில்லை.
News November 9, 2025
வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டது

நாடு முழுவதும் கடந்த மாதம் 31,49,846 பைக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக FADA தெரிவித்துள்ளது. இது வரலாறு காணாத உச்சமாகும். 1,29,517 ஆட்டோக்கள், 73,577 டிராக்டர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம். இது, கடந்த செப். மாதத்துடன் ஒப்பிடும்போது 120% அதிகமாகும். GST குறைப்பு, பண்டிகை கால விற்பனையே காரணம் என டீலர்கள் கூறியுள்ளனர். எது எப்படியோ சாலைகளில் முறையாக ரூல்ஸை கடைப்பிடித்து வண்டியை ஓட்டுங்க.
News November 9, 2025
National Roundup: PM மோடி விரைவில் பூடான் பயணம்

*PM மோடி அரசு முறை பயணமாக வரும் 11-ம் தேதி பூடான் பயணம். *வடகிழக்கு மாநிலங்களின் கல்விக்காக ₹21,000 கோடி முதலீடு செய்ததாக FM தகவல். *காசி தமிழ் சங்கத்தின் 4-வது நிகழ்வு டிச.2 முதல் 15-ம் தேதி வரை நடக்கவுள்ளது. *பிஹாரில் சாலையோரம் VVPAT ஒப்புகை சீட்டு இருந்த விவகாரத்தில் உதவி தேர்தல் அதிகாரி இடைநீக்கம். *இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடக்கம்.


