News October 8, 2025
அதிமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி இதுவா?

ராமதாஸுடன் EPS கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் பரவி வருகிறது. ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸை நேரில் சந்தித்து EPS உடல்நலன் குறித்து விசாரித்த நிலையில், இருவரும் தனிமையில் 30 நிமிடங்கள் கூட்டணி பற்றி பேசியதாகவும் கூறப்படுகிறது. தனிமையில் பேசியதை உறுதிப்படுத்தியுள்ள அருள் MLA, இருவரும் என்ன பேசினார்கள் என்பது தனக்கு தெரியாது என்று FB-ல் பதிவிட்டுள்ளார்.
Similar News
News October 8, 2025
இன்று முதல் அமலுக்கு வந்தது

Google Pay, PhonePe, Paytm மூலம் பணம் அனுப்பும்போது இனி PIN நம்பரை உள்ளிடவேண்டிய அவசியமில்லை. மாறாக, முகம் (அ) கைரேகையை வைத்தே ₹5,000 வரை பணம் அனுப்பலாம். PIN நம்பரை விட இவை பாதுகாப்பானது என கருதி NCPI இதை நடைமுறைப்படுத்தியுள்ளது. Biometric முறை நடைமுறைக்கு வந்தாலும், PIN நம்பர் முறையும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News October 8, 2025
நீ எண்டு கார்டு வச்சா இவன் டிரெண்ட மாத்தி வைப்பான்!

குண்டாக இருக்கிறார்; Retire ஆக சொல்லுங்க என தொடர்ந்து விமர்சித்தவர்களுக்கு சவுக்கடி ரிப்ளை கொடுத்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா. நேற்று நடைபெற்ற CEAT விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பார்க்க பயங்கர ஸ்லிம்மாக மாறியுள்ளார். மார்ச் மாதத்திற்கு பிறகு, ரோஹித் சர்மா ப்ளூ ஜெர்சியில் வரும் 19-ம் தேதி தொடங்கும் ஆஸி. அணிக்கு எதிரான ODI தொடரில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 8, 2025
Recipe: தேங்காய் சாக்லேட் லட்டு செய்வது எப்படி?

வாணலியில் நெய்விட்டு தேங்காய் துருவல் (அரை கப்) சேர்த்து வதக்கவும். அதில் காய்ச்சிய பசும்பாலை ஊற்றவும். பின் மில்க் மெய்ட், கோகோ தூள், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரை கரைந்து இளகி பின் கெட்டியாகும். இப்பதம் வந்ததும் பொடித்த நட்ஸை நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும். இந்த கலவை ஆறியவுடன் கையில் சிறிது நெய் தடவி கொண்டு உருண்டையாகப் பிடித்தால் சுவையான தேங்காய் சாக்லேட் லட்டு ரெடி. SHARE IT.