News October 6, 2025

கரூர் துயரம்: கைது செய்ய விரைகிறது போலீஸ்

image

கரூர் துயர சம்பவத்தில் ஆனந்த், நிர்மல் குமார் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், ஜாமின் மனு விரைவில் விசாரணைக்கு வரவிருப்பதால், இருவரையும் இன்று இரவு அல்லது நாளைக்குள் கைது செய்ய தனிப்படை தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News October 6, 2025

BREAKING: கரூர் சென்றார் கமல்

image

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து கட்சியினரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், மநீம தலைவர் கமல்ஹாசனும் கரூருக்கு விரைந்துள்ளார். செந்தில் பாலாஜியுடன் சென்ற அவர், கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, கமல் ஆறுதல் கூற உள்ளார்.

News October 6, 2025

சற்றுமுன்: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ₹1,400 அதிகரித்து நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹880 அதிகரித்த நிலையில், மாலையில் ₹520 உயர்ந்துள்ளது. தற்போது, ஒரு கிராம் ₹11,125-க்கும், ஒரு சவரன் ₹89,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டில் மட்டும் 1 சவரன் 30,000-க்கு மேல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News October 6, 2025

Attitude காட்டுவது எனக்கு பிடிக்காது: சிராஜ்

image

எந்த நிலையில் இருந்து, இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்தேன் என்பதை எப்போதும் தான் மறக்க மாட்டேன் என சிராஜ் தெரிவித்துள்ளார். லட்சியத்தில் வெற்றி பெற்ற பின்னரும் எளிமையாக இருக்கவே விரும்புவதாகவும், இந்திய அணியின் ஸ்டார் பவுலர் என Attitude காட்டுவது, எப்போதும் தனக்கு பிடிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிறுவயது நண்பர்களுடன் அரட்டை அடிப்பதை இப்போதும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!