News April 15, 2024
நயினார் நாகேந்திரன் ஆஜராக சம்மன்

ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஏப்.22ல் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், தனக்கு எவ்வித சம்மனும் விரவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரின் மைத்துனர் துரை என்பவரிடம் சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
Similar News
News October 17, 2025
GALLERY: 1920-ல் இவுங்கதான் டிரெண்டிங் புள்ளிங்கோ!

இன்று Fade- Cut முதல் Mullet வரை பல ஹேர்ஸ்டைல்ஸ் இருக்கு. அன்னைக்கெல்லாம் அப்படி என்ன ஸ்டைல் இருந்திருக்கப்போகுது ‘னு நீங்க நெனச்சா மேலே உள்ள போட்டோஸை Swipe பண்ணி பாருங்க. அப்பவே இந்தியாவுல பல ஹேர்ஸ்டைலில் நம்ம தாத்தாக்கள் கலக்கிருக்காங்க. 1920-ல் German-ஐ சேர்ந்தவரு எடுத்த போட்டோஸ் இது. இதுல, எந்த ஹேர்ஸ்டைல் இப்பவும் செம டிரெண்டிங் ஆகும்? உங்க ஃபிரெண்ட்ஸுக்கு ஷேர் பண்ணிடுங்க.
News October 17, 2025
16 வயது பெண்ணுடனான பாலியல் உறவு குற்றமல்ல: HC

2005-ல் 16 வயது பெண், தனது விருப்பத்தால் இஸ்லாம் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், தனது மகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்ணின் தந்தை தொடுத்த வழக்கில், இஸ்லாம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இஸ்லாமின் மேல்முறையீட்டை விசாரித்த அலகாபாத் HC, முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ், திருமணமாகி 16 வயது பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டது குற்றமாகாது என கூறி, தண்டனையை ரத்து செய்தது.
News October 17, 2025
மனம் கவர்ந்த மகா நடிகைக்கு இன்று ஹேப்பி பர்த்டே!

சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும், இன்று இந்திய சினிமாவில் தனி இடத்தை உருவாக்கி உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தேசிய விருதை வென்ற இவரின் சினிமா கேரியர், பல வெற்றிகளையும் விமர்சனங்களையும் உள்ளடக்கியது. தென்னிந்திய சினிமாவில் உச்சம் தொட்டவர், தற்போது பாலிவுட்டிலும் தனது தடத்தை பதிக்க தொடங்கிவிட்டார். உங்களுக்கு பிடிச்ச கீர்த்தி சுரேஷ் படம் எது?