News April 14, 2024

அமலாகிறது தடைக்காலம்.. உயர்கிறது மீன்களின் விலை

image

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலாக உள்ளதால், மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மீன்கள் இனப்பெருக்கத்திற்காக நாளை முதல் 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் விசைப் படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மாட்டார்கள். இதனால் மீன்களின் வரத்து குறையும் என்பதால் வஞ்சிரம், கடம்பா போன்ற மீன்களின் விலை கணிசமாக உயரலாம் என மீனவர்கள் கூறியுள்ளனர்.

Similar News

News September 10, 2025

அடுத்த நேபாள பிரதமர் ராப் பாடகர்?

image

அண்டை நாடான நேபாளத்தில் ஜென் Z இளைஞர்களின் போராட்டத்தால் கே.பி. சர்மா ஒலியின் கம்யூ., ஆட்சி கவிழ்ந்தது. தற்போது அங்கு ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. இதில் காத்மாண்டு மேயரான பிரபல ராப் பாடகர் பாலேந்திர ஷா பெயர் முன்னிலையில் இருக்கிறது. அவருக்கு சமூக ஊடகங்களில் இளைஞர்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

News September 10, 2025

சற்றுமுன்: கட்சியில் இருந்து நீக்கினார் இபிஎஸ்

image

அமித்ஷாவை சந்தித்து ‘அதிமுக ஒருங்கிணைப்பு’ குறித்து பேசியதாக நேற்று மதியம் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்களை நீக்கி இபிஎஸ் அதிரடி காட்டியிருக்கிறார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் மணிகண்டன் மருதமுத்து உள்ளிட்டோரை கட்சியில் இருந்தும், ஏ.வி.எம். செந்தில், செல்வன், அருள் ராமசந்திரன் உள்ளிட்டோர் கட்சி பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

News September 10, 2025

மூட்டு வலியை விரட்ட செய்யும் எளிய யோகா!

image

✦மூட்டு வலிகளை குறைத்து, கால் தசைகளுக்கு சுப்த பாதாங்குஸ்தாசனம் வலு சேர்க்கும்.
➥ தரையில் வானம் பார்த்தபடி படுக்கவும்.
➥கைகள் பக்கவாட்டில் நேராக இருக்க, வலது காலின் முட்டியை மடக்காமல் மேலே உயர்த்தவும்.
➥காலை உயர்த்திய நிலையில், வலது கை விரல்களால் காலை தொடவும்.
➥இந்த நிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்து விட்டு, பழைய நிலைக்கு திரும்பவும். இதே போல, இடது காலிலும் செய்யவும். Share it to friends.

error: Content is protected !!