News October 1, 2025
12வது போதும்.. RRB-ல் 2424 காலியிடங்கள்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2424 Commercial – Ticket Clerk பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12வது தேர்ச்சி பெற்ற 18- 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 4 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு ₹21,700 சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 21-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
Similar News
News October 2, 2025
கார்கேவுக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தம்

காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று உடல்நலக் குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு இதயத் துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக, அவரது மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள M S ராமய்யா ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ள அவரது உடல்நலம் சீராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News October 2, 2025
EMI செலுத்தாவிட்டால் போன் லாக்? RBI கவர்னர் விளக்கம்

கடனில் போன் வாங்கிவிட்டு, EMI செலுத்தாமல் இருக்கும் நபர்களின் போனை லாக் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறையின் நன்மை, தீமைகளை ஆய்வு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும், இதில் நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் நலன்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 2, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 2, புரட்டாசி 16 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: தசமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை