News October 1, 2025
திமுக விழாவில் பங்கேற்றவர் கரூர் துயரத்தில் மரணம்

கரூர் துயர நிகழ்வை அரசியலாக பார்க்க விரும்பவில்லை என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் துயரத்தில் திமுக முப்பெரும் விழாவில் கலந்துக் கொண்ட தம்பியும் உயிரிழந்துள்ளார் எனக் கூறிய அவர், யார் மீது தவறு என பேசாமல், இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றார். மேலும், சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் கூட்டம் அதிகளவில் வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
Similar News
News October 1, 2025
மெஹந்தியை தலைக்கு இப்படி யூஸ் பண்ணுங்க..!

➤நரை முடியை மறைக்க, மெஹந்தியை கிரீன் டீயில் ஊற வைத்து, தயிர், முட்டை சேர்த்து முடியில் தடவவும். 2-3 மணி நேரம் கழித்து கழுவவும் ➤மெஹந்தி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். இதனால், மெஹந்தி, வெந்தய தூள், பிராமி பவுடரை சேர்த்து முடியில் தடவி, 1 மணி நேரம் கழித்து குளிக்கவும் ➤மெஹந்தியுடன் தயிர், தேன் சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் போட்டு கழுவினால், இயற்கை கண்டிஷனர் போல செயல்படும். SHARE.
News October 1, 2025
ஐசிசி வரலாற்றில் அபிஷேக் சர்மா புதிய சாதனை

ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். ஆசிய கோப்பையில் அவர் 7 இன்னிங்ஸில் 314 ரன்கள் குவித்த நிலையில், டி20 தரவரிசையில் 931 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் டேவிட் மலான் 919 புள்ளிகள் எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது. இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 912 புள்ளிகள், விராட் கோலி 909 புள்ளிகள் ஆகியோரின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.
News October 1, 2025
தந்தையை மிஞ்சிய மகள்

இன்று வெளியான ‘ஹூருன் ரிச் லிஸ்ட் 2025’ என்ற இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார் ரோஷினி நாடார். இதை பார்த்த பலரும் அவரின் தந்தை ஷிவ் நாடார் ஏன் பட்டியலில் இல்லை என்று கேட்கின்றனர். HCL குழும நிறுவனரான ஷிவ் நாடார், அதன் 47% பங்குகளை மகள் ரோஷினியின் பெயருக்கு மாற்றிவிட்டார். இதனாலேயே HCL-இன் சேர்பர்சனாக இருக்கும் ரோஷினி தற்போது நாட்டின் 3-வது பெரும் பணக்காரராக உயர்ந்துள்ளார்.