News October 1, 2025
கல்வியும், வேலைவாய்ப்புமே மருந்தாகும்: வைரமுத்து

கரூர் துயர சம்பவம் குறித்து விசாரித்து வரும் Retd நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில், இறந்தவர்களின் குடும்பங்களில் வேலை வாய்ப்பு, கல்வி கற்கும் வாய்ப்புடையவர்கள் பற்றி அரசிடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார். வேலைவாய்ப்பும், கல்வியுமே அவர்களின் மாபெரும் துயரத்துக்கு மருந்தாக முடியும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 1, 2025
அப்பா ஆனார் மேக்னஸ் கார்ல்ஸன்❤️❤️

தந்தையை போல் தனயன் என்பதற்கு மேலே உள்ள படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்ஸன், எல்லா விக்டோரியா தம்பதிக்கு கடந்த செப்.27-ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. இருவரும் ஒன்றாக தூங்கும் படத்தை அவர் SM-ல் பதிவிட்ட நிலையில், பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலர் உங்களை வீழ்த்துவதே கடினமாக உள்ளது, அதற்குள் மற்றொரு போட்டியாளரா என நகைச்சுவையாக கூறியுள்ளனர்.
News October 1, 2025
செந்தில் பாலாஜி பதறுவது ஏன்? அதிமுக

கரூர் துயரத்தில் செந்தில் பாலாஜி பதறுவதாக அதிமுக விமர்சித்துள்ளது. கரூர் சம்பவத்தை விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்த பிறகு சட்ட ஒழுங்கு ADGP, டிஜிபி, வருவாய் செயலர் பிரஸ் மீட் நடத்திய நிலையில், பதறிக்கொண்டு செந்தில் பாலாஜி பிரஸ் மீட் நடத்துவதாக அதிமுக சாடியுள்ளது. பல விஷயங்களுக்கு மவுனம் காத்த அவர், இவ்வழக்கில் மடைமாற்ற அரசியலுக்காக வாய் திறக்கிறாரா என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
News October 1, 2025
பிரசாந்த் கிஷோரின் 7 தேர்தல் வாக்குறுதிகள்

பிஹாரில் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள பிரசாந்த் கிஷோர், தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். *60 வயதை தாண்டிய அனைவருக்கும் மாதம் ₹2,000. * புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என புதிய துறையை உருவாக்கி, வேலைவாய்ப்பு வழங்கப்படும். *அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் வரை, தனியார் பள்ளிகளில் இலவச கல்வி. *ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்பன உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.