News October 1, 2025
செந்தில் பாலாஜி பதறுவது ஏன்? அதிமுக

கரூர் துயரத்தில் செந்தில் பாலாஜி பதறுவதாக அதிமுக விமர்சித்துள்ளது. கரூர் சம்பவத்தை விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்த பிறகு சட்ட ஒழுங்கு ADGP, டிஜிபி, வருவாய் செயலர் பிரஸ் மீட் நடத்திய நிலையில், பதறிக்கொண்டு செந்தில் பாலாஜி பிரஸ் மீட் நடத்துவதாக அதிமுக சாடியுள்ளது. பல விஷயங்களுக்கு மவுனம் காத்த அவர், இவ்வழக்கில் மடைமாற்ற அரசியலுக்காக வாய் திறக்கிறாரா என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
Similar News
News December 13, 2025
விரைவில் ஜனநாயகன் டீசர்?

ஜன.9-ல் பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகவுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் ஆடியோ லாஞ்ச் டிச.27-ல் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக படத்தின் 2-வது பாடல் & டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ‘தளபதி கச்சேரி’ மேலும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், இப்படத்தின் பாடல்கள் தெறிக்கவிடும் விதமாக அமைந்துள்ளதாக அனிருத்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
News December 13, 2025
ராசி பலன்கள் (13.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 13, 2025
கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார் செங்கோட்டையன்

2026 தேர்தலில் விஜய் தலைமையில் கூட்டணி அமைக்கும் பணிகளை தவெக முடுக்கிவிட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கான சிறப்புக் குழு நேற்று அமைக்கப்பட்ட நிலையில், விஜய்யை CM வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார். பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்டவை தற்போதுவரை கூட்டணியை உறுதி செய்யவில்லை. அக்கட்சிகளை இழுக்க காய் நகர்த்தி வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


