News October 1, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 475 ▶குறள்: பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். ▶பொருள்: மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.

Similar News

News October 1, 2025

அரசியல் லாபமடைய முயலும் EPS: தங்கம் தென்னரசு

image

கரூர் துயரில் இருந்து அரசியல் லாபம் பெற முடியுமா என்று EPS முயல்வது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டு, மக்களிடம் விளக்கமளிக்காமல் ஓடி ஒளியும் அதிமுக அரசை போல இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் அரசு இது என்பதை EPS புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிக்கை வாயிலாக கூறியுள்ளார்.

News October 1, 2025

முதுகு வலிக்கு இந்த யோகாசனம் பண்ணுங்க!

image

➤சம்மணங்கால் போட்டு அமரவும். முதுகை சாய்த்து, பின்னால் படுக்கவும் ➤தலை தரையில் படும்படி இருக்க, மார்பை மேல் நோக்கி தூக்கவும் ➤
➤மடித்து வைத்திருக்கும் பாதங்களின் மேல், இரு கைகளையும் வைத்து, உடலை பேலன்ஸ் பண்ணவும் ➤இந்த நிலையில், 25- 30 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும் ➤மத்ஸ்யாசனம் செய்வதால் மார்பு நன்றாக விரிவடைவதுடன், முதுகு பிரச்னை தீரும். SHARE IT.

News October 1, 2025

சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர்

image

2026 தேர்தல் வரவிருக்கும் நிலையில், மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்க ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நாமக்கல் முன்னாள் மா.செ நதிராஜவேல், கொமதேக நாமக்கல் மாவட்ட துணைச் செயலாளர் ஜெயகுமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கொமதேகவின் அங்கீகாரத்தை ECI சமீபத்தில் ரத்து செய்திருந்தது.

error: Content is protected !!