News October 1, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர்

2026 தேர்தல் வரவிருக்கும் நிலையில், மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்க ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நாமக்கல் முன்னாள் மா.செ நதிராஜவேல், கொமதேக நாமக்கல் மாவட்ட துணைச் செயலாளர் ஜெயகுமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கொமதேகவின் அங்கீகாரத்தை ECI சமீபத்தில் ரத்து செய்திருந்தது.
Similar News
News December 15, 2025
நாமக்கல் முட்டை விலை நிலவரம்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.25- காசுகளாக விற்பனை ஆகி வருகின்றது. இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.25-ஆக நீடிக்கின்றது. முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால், முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தில் நீடிக்கின்றது.
News December 15, 2025
உதட்டளவில் சமூகநீதி பேசும் திமுக அரசு: அண்ணாமலை

100-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மாணவர் விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படாததால், இந்த விடுதிகளில் சேர்ந்து படிக்க மாணவர்கள் விருப்பம் காட்டுவதில்லை. உதட்டளவில் சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, பட்டியல் சமூக மாணவர்கள் முன்னேற்றத்தில் CM காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 15, 2025
BREAKING: பள்ளிகள் 9 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

பள்ளிகளுக்கு டிச.24 முதல் ஜன.1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக, ஜன.2-ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் ஜன.4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகின. தற்போது, புதிய மாற்றமாக 9 நாள்கள் விடுமுறை என அரசு அறிவித்திருக்கிறது. புதுச்சேரியிலும் ஜன.1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


