News September 30, 2025
Women’s WC: இந்தியா 269 ரன்கள் சேர்ப்பு

மகளிர் உலக கோப்பையில், இலங்கைக்கு இந்தியா 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இனோகா ரனவீராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா 125 ரன்னுக்குள் 6 விக்கெட்களை இழந்த நிலையில், தீப்தி சர்மா மற்றும் அமன்ஜோத் கவுர் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் ஸ்நே ரானா அதிரடி காட்ட இந்தியா 47 ஓவர்களில் 269 ரன்கள் ஸ்கோர் செய்தது. முன்னதாக மழை குறுக்கீட்டால் 3 ஓவர்கள் குறைக்கப்பட்டன.
Similar News
News October 1, 2025
கோப்பையை எப்படி எடுக்கலாம் – சரமாரியாக தாக்கிய BCCI

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, தனது சரமாரியாக கேள்விகளால் தாக்கியுள்ளார். ஆசிய கோப்பையை இந்தியா, நக்வி கையால் பெற மறுத்த பின்னர், கோப்பை நக்வி கஸ்டடியில் எடுத்துச்செல்லப்பட்டது. இதற்கு, இன்று நடைபெற்ற ACC கூட்டத்தில் சுக்லா, “எப்படி கோப்பையை எடுத்துச் செல்லலாம். அது ACC சொத்து. இது தொடர்பாக ICC-யிடம் புகார் அளிக்கப்படும்” என்று பேசியுள்ளார்.
News October 1, 2025
வாவ்.. இவ்வளவு உயரத்தில் பாலமா?

இவ்வளவு உயரத்தில் பாலமா? அதுவும் இவ்வளவு நீளமா? படங்களில், கிராபிக்ஸ் காட்சிகளில் மட்டும் இதுபோன்று நாம் பார்த்திருப்போம். இதனை சீனா ரியலாக செய்து முடித்துள்ளது. உலகின் மிக உயரமான பாலத்தை கட்டி, போக்குவரத்துக்கும் திறந்துவிட்டது. நதியிலிருந்து சுமார் 2,050 அடி உயரத்தில் மற்றும் 4,600 அடி நீளமுள்ள இந்த பாலம், மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு ரைடு போனா எப்படி இருக்கும்?
News October 1, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க