News September 30, 2025
மூலிகை: ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள், கரும் தழும்புகள் மீது பூச அவை மறையும் *அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு ஆகியவற்றை பொடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டால், கொப்புளங்கள் தணியும் *நரம்பு தளர்ச்சியை போக்க, ஜாதிக்காய் உதவும் *ஜாதிக்காயின் விதைகளின் மேலுள்ள ‘ஜாதிபத்ரி’ திசு வயிற்றுப் போக்கு, உப்புசம் ஆகியவற்றை போக்கும். SHARE.
Similar News
News September 30, 2025
ஹோ.. இப்படித்தான் Bullet Proof ஜாக்கெட் வேலை செய்யுதா!

துப்பாக்கி புல்லட்களை எப்படி Bullet Proof ஜாக்கெட்கள் தடுக்கின்றன என்பது தெரியுமா? ஒரு Bullet Proof ஜாக்கெட்டில், Ceramic, Aramid Fiber, Vertex & Poly- etheleyne என 4 லேயர்கள் இருக்கும். முதல் லேயர் புல்லட்டின் வேகத்தை குறைக்கும். 2-வது லேயர் புல்லட்டின் மொத்த எனர்ஜியையும் Absorb செய்து கொள்ளும். 3-வது & 4-வது லேயர்கள் புல்லட் உடம்பில் படாமல் தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டவை.
News September 30, 2025
கரூர் துயரம்.. வெளிச்சத்துக்கு வந்த புதிய தகவல்

கரூர் துயர வழக்கு விசாரணையில் காவலர்கள் பாதுகாப்பு குறைவாக இருந்தது என்றும்; அரசு தரப்பிலேயே தவறு உள்ளதாகவும் தவெக குற்றம் சாட்டியது. விஜய் பிரசார இடத்தில் சாக்கடை குழி சரிவர மூடவில்லை; வெறும் அட்டைகளை கொண்டு மூடியிருந்தனர் என புதிய தகவலை கூறிய தவெக, போலீசாரின் தடியடியால் சாக்கடை கால்வாயில் ஏராளமானோர் விழுந்தனர். அவர்கள் மீது பலர் விழுந்தனர் எனவும் மதுரை ஐகோர்ட்டில் பதிலளித்துள்ளது.
News September 30, 2025
கூட்ட நெரிசலுக்கு தவெகதான் காரணம்: போலீஸ்

கரூர் துயர வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளையில், ஒருமணி நேரத்திற்கும் மேலாக காரசாரமாக விவாதம் நடைபெற்றது. பிரசார இடத்திற்கு 50 மீட்டருக்கு முன்பே விஜய்யை பேச சொல்லியும் தவெகவினர் கேட்கவில்லை; கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு தவெக தான் காரணம்; ராங் ரூட்டில் போக வேண்டாம் என்ற எச்சரிக்கையை தவெகவினர் மீறினர் என தவெக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை போலீஸ் முன்வைத்தது.