News September 30, 2025

தவெக நிர்வாகிகளுக்கு ஆயுள் தண்டனையா?

image

கரூர் துயர சம்பவம் தொடர்பாக <<17869322>>BNS<<>> சட்டத்தின் கீழ் N.ஆனந்த், CTR நிர்மல் குமார், மா.செ மதியழகன் மற்றும் சிலர் என குறிப்பிட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது. ‘மற்றும் சிலர்’ (Others) என குறிப்பிடப்பட்டுள்ளதால், விசாரணையின் முடிவில் விஜய் பெயர் சேர்க்கப்பட்டால் அவருக்கும் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

Similar News

News March 11, 2026

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அதிகரிக்கும் விறகு விலை

image

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல சிறு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பல பகுதிகளில் விறகு அடுப்பில் சமைப்பதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், விறகு விலையும் டபுள் மடங்காக அதிகரித்துள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு 1 டன் விற்கப்பட்ட விறகு, தற்போது 10 டன் வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால், விறகு தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளதாம். உங்க பகுதியில் எப்படி?

News March 11, 2026

CSK-வில் ரெய்னா? அணியின் CEO அப்டேட்

image

ஐபிஎல் சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், CSK-வின் பேட்டிங் அல்லது பீல்டிங் பயிற்சியாளராக ரெய்னா நியமிக்கப்படவுள்ளார் என தகவல் கசிந்தது. ஆனால், இது ஒரு வதந்தி என மறுத்துள்ள அணியின் CEO காசி விஸ்வநாதன், பயிற்சியாளராக ரெய்னா நியமிக்கப்படவில்லை என கூறியுள்ளார். CSK-வில் இணைய ரெய்னா விருப்பம் தெரிவித்தும், அவரை அணி நிர்வாகம் சேர்க்காததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

News March 11, 2026

இனி மொபைல் டேட்டாவிற்கும் வரி!

image

மத்திய அரசு மொபைல் டேட்டா பயன்பாட்டிற்கு வரி விதிப்பது குறித்த ஆய்வு செய்யுமாறு தொலைத்தொடர்பு துறைக்கு அறிவுறுத்தி உள்ளதாம். 1 GB டேட்டாவிற்கு ₹1 வரி விதித்தால் கூட, ஆண்டுக்கு சுமார் ₹22,900 கோடி வருவாய் கிடைக்கும். வரி வருவாயுடன் சேர்த்து, அதிகப்படியான ஸ்க்ரீன் டைமை குறைப்பதையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளதாம். ஆலோசனை நிலையில் உள்ள இத்திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

error: Content is protected !!