News September 30, 2025
கரூருக்கு வர PM விரும்பினார்: நிர்மலா சீதாராமன்

பிரதமர் கரூருக்கு வந்து, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விரும்பியதாக கூறிய நிர்மலா சீதாராமன், அவர் வர முடியாத காரணத்தால் தான் வந்ததாக தெரிவித்துள்ளார். விஜய் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில், ஹாஸ்பிடலில் சிகிச்சையில் இருந்தோரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்றார்.
Similar News
News September 30, 2025
சளி, இருமலுக்கு இந்த மூலிகை தேநீர் குடிங்க!

மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்ற தொல்லைகள் நீங்க, ஆடாதொடை டீ பருகுமாறு சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் *இந்த டீயை செய்ய, சில ஆடாதோடை இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும் *3-5 நிமிடங்கள் கொதித்த பிறகு, வடிகட்டி, தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து பருகலாம். இது சளி, இருமல் போன்ற கப நோய்களைக் குணப்படுத்தும். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 30, 2025
தங்கம் அவசியம் தானா? எச்சரிக்கும் நிபுணர்

தங்கத்தை வாங்கி வைப்பது ஒரு போதும் உங்கள் செல்வத்தை உயர்த்தாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு பதிலாக கோல்ட் ETF, Share market-ல் நீண்ட காலம் முதலீடுகளை செய்தால் உங்கள் பணம் இரட்டிப்பாகும் எனவும் அறிவுறுத்துகின்றனர். இந்தியாவில் தங்கம் முதலீடாக பார்க்காமல் அந்தஸ்தாக பார்க்கப்படுவதால், தங்கத்தில் நான்கில் 1 பங்கு மட்டும் முதலீடு செய்வதே சரியாக இருக்கும் என்கின்றனர். SHARE.
News September 30, 2025
இனி வாட்ஸ்அப்பில் ஆதார் அட்டை பெறலாம்

இனி ஆதார் அட்டை பெற இ-சேவை மையங்கள் செல்ல தேவையில்லை. MyGov உதவி மைய எண்ணான +91-9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைலில் Save செய்யுங்கள். இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள். பின்னர், அதில் வரும் அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளித்தால் உடனடியாக ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். இருப்பினும், இந்த முறையில் ஆதார் அட்டையை பெற DigiLocker-ல் ஆதாரை பதிவேற்றம் செய்திருப்பது அவசியம்.