News September 29, 2025
Sports Roundup: ஹாக்கியில் இந்தியா அசத்தல் வெற்றி

*ஏடிபி 500 டோக்கியோ ஓபனில் ரோகன் போபண்ணா – டகேரு யுசூகி இணை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். *ஜூனியர் ஹாக்கியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. *ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப், 4*100மீ மெட்லே ரிலே பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது. *புரோ கபடி லீக்கில் இன்று யுபி யோத்தாஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதல்.
Similar News
News September 29, 2025
லடாக்கில் அமைதி நிலவும் வரை பேச்சுவார்த்தை நடக்காது

லடாக்கில் அமைதி நிலவும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என லே தலைமை கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும், மக்களிடையே நிலவும் பீதி, கோபம், துன்பங்களை களைய மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அதேபோல், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை விடுவிக்க வேண்டும் என கார்கில் ஜனநாயக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
News September 29, 2025
பாஜக தலைவரின் மிரட்டல்: காங்கிரஸ் கடும் கண்டனம்

ராகுல்காந்தியை ‘நெஞ்சில் சுட வேண்டும்’ என்று TV விவாதத்தில் பாஜக செய்தி தொடர்பாளர் பின்ட்டு மகாதேவ் பேசியதற்கு காங்., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ள காங்., இது அரசியல் விமர்சன வரம்புகளை கடந்தது. ராகுலின் உயிருக்கு அச்சுறுத்தலாக, வன்முறையை தூண்டுவதாக இது உள்ளது. இந்த விஷயத்தின் தீவிரத்தை கருதி, உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளது.
News September 29, 2025
காமெடி நடிகர் மாரடைப்பால் காலமானார்

நகைச்சுவை நடிகரும், தயாரிப்பாளருமான யஷ்வந்த் சர்தேஷ்பாண்டே(62) பெங்களூருவில் மாரடைப்பால் காலமானார். கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற ‘சதிலீலாவதி’ படத்தின் கன்னட ரீமேக்கான ‘ராமா ஷாமா பாமா’ படம் இவருக்கு பெரும் மதிப்பை கொடுத்தது. மேலும், மர்மா, அம்ரிதாதாரே உள்ளிட்ட பல வெற்றி படங்களில் வசனங்களும் எழுதியுள்ளார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP