News September 29, 2025

காமெடி நடிகர் மாரடைப்பால் காலமானார்

image

நகைச்சுவை நடிகரும், தயாரிப்பாளருமான யஷ்வந்த் சர்தேஷ்பாண்டே(62) பெங்களூருவில் மாரடைப்பால் காலமானார். கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற ‘சதிலீலாவதி’ படத்தின் கன்னட ரீமேக்கான ‘ராமா ஷாமா பாமா’ படம் இவருக்கு பெரும் மதிப்பை கொடுத்தது. மேலும், மர்மா, அம்ரிதாதாரே உள்ளிட்ட பல வெற்றி படங்களில் வசனங்களும் எழுதியுள்ளார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

Similar News

News November 8, 2025

பிஹார் மக்களை திமுக இழிவுபடுத்தியது: அமித் ஷா

image

பிஹார் மக்களை பீடியுடன் ஒப்பிட்டு திமுக இழிவுபடுத்தியதாக கூறி அமித்ஷா பிரசாரத்தில் ஈடுபட்டார். தனக்கு பிடித்தமான CM என்று ஸ்டாலினை தேஜஸ்வி குறிப்பிட்டதாக பேசிய அமித்ஷா , அவரது கட்சியான திமுக சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதாகவும், ராமர் கோவில் கட்டும் திட்டத்தை எதிர்த்ததாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, TN-ல் பிஹாரிகளை திமுகவினர் துன்புறுத்துவதாக PM மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 8, 2025

மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ நடைபயணம்

image

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவும், போதைப் பொருள்கள் பயன்பாட்டை எதிர்த்தும் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக வைகோ அறிவித்துள்ளார். மதுவின் பிடியில் இருந்து இளைய தலைமுறையினரை மீட்டு எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த சமத்துவ நடைபயணம் இருக்கும் என அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ஜன.2-ல் தொடங்கும் இந்த நடைபயணத்தை மதுரையில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வைகோ பேசியுள்ளார்.

News November 8, 2025

அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி: வீரலட்சுமி

image

தவெக செய்த ரெளடிசமே கரூரில் 41 பேர் உயிரிழக்க காரணம் என தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி சாடியுள்ளார். அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி என விமர்சித்த அவர், களத்தில் நின்று மக்களை காப்பாற்றுபவர்களே நிஜ ஹீரோ என்றும், கரூர் துயருக்கு பிறகு தவெகவில் அனைவருமே ஓடி ஒளிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்காக புரட்சிகரமான போராட்டம் நடத்தி, விஜய் சிறை செல்ல தயாரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!