News September 29, 2025

உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமா இருக்கணுமா?

image

வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற பல பண்புகள் நிறைந்த முள்ளங்கி, கிட்னியை சுத்தப்படுத்துகிறது. முள்ளங்கியை காய்கறியாகவும், அதன் இலையை கீரையாகவும் சாப்பிடலாம். இது குடல் ஆரோக்கிய மேம்பாடு, கல்லீரல் & சிறுநீரக நச்சு நீக்கம், மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்யும். இதிலுள்ள பொட்டாசியம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இத்தனை நன்மைகள் கொண்ட காயை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

Similar News

News September 29, 2025

SIM CARD-களுக்கு Expiry Date இருக்கா?

image

SIM CARD-களுக்கு Expiry Date இல்லையென்றாலும், 90 நாட்களுக்கு மேல் நீங்கள் அதை பயன்படுத்தாமல் இருந்தால் அது செயலிழந்து போகலாம். அதோடு, தண்ணீரில் விழுந்தாலோ, அடிக்கடி கழற்றி மாட்டும்போதோ SIM CARD சேதமடையலாம். இதனால் நெட்வொர்க் இணைப்பு பிரச்னைகள் ஏற்படும். எனவே, இத்தகைய பிரச்னைகளை சந்தித்தால் மட்டும், பயனர்கள் அவர்களது தொலைபேசி சேவை வழங்குனரை அணுகி, SIM CARD-ஐ மாற்றலாம். SHARE.

News September 29, 2025

BREAKING: கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜி காரணம்: TVK

image

கூட்ட நெரிசல் சம்பவத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக தவெக குற்றஞ்சாட்டியுள்ளது. மதுரை HC-ல் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்துள்ள மனுவில் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி குறித்து விஜய் பேசிக்கொண்டிருந்த போது, செருப்பு, கற்கள் வீசப்பட்டன என்றும் அப்பாவி மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதாகவும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

News September 29, 2025

தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டாரா விஜய்?

image

கரூரில் நிகழ்ந்த கூட்டநெரிசலைத் தொடர்ந்து அன்றிரவே சென்னை திரும்பிய விஜய், தற்போது திருச்சி விமானம் நிலையத்திற்கு தனி விமானத்தில் புறப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அவர் வீட்டிலிருந்து வெளியே வந்த சிறிது நேரத்தில், சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கு Charter flight ஒன்று கிளம்பியதையும், ஒப்பிட்டு பார்த்து இச்செய்தி வெளியாகி இருக்கிறது.

error: Content is protected !!