News September 29, 2025
மத்திய கிழக்கில் மகத்தான வாய்ப்பு: டிரம்ப்

மத்திய கிழக்கில் சிறப்பான ஒன்றை அடைய ஒரு உண்மையான வாய்ப்பு உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து சமீபத்தில் ஐநாவில் அவர் பேசியிருந்தார். இந்நிலையில், ட்ரூத் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், அனைத்து நாடுகளும் ஒரு சிறப்பான முடிவை எதிர்நோக்குவதாகவும், அதை தாங்கள் (USA) முடிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 29, 2025
3 பேரின் ஆட்டம் அபாரம்: தினேஷ் கார்த்திக்

பாக்.,-ஐ 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இதற்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ஃபைனலில் திலக் வர்மா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ் ஆகியோரின் சிறந்த முயற்சியையும் குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார். குல்தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். திலக் 69 ரன்கள் விளாசி களத்தில் இருந்தார்.
News September 29, 2025
21 நாட்கள் விதி தெரியுமா?

பிடிக்காத அல்லது கெட்டப் பழக்கத்தை கைவிட வேண்டுமா? அல்லது புதிய விஷயம் ஒன்றை தினசரி பழக்கமாக்க வேண்டுமா? இதற்கு 21 நாட்கள் விதி கைக்கொடுக்கும் என்கின்றனர். எந்த ஒன்றை தினசரி தொடர்ந்து 21 நாட்களுக்கு செய்கிறோமோ, அது அப்படியே தினசரி பழக்கமாகிவிடும் என்கிறது 21 நாட்கள் விதி. இதையே 90 நாட்கள் தொடர்ந்து செய்துவிட்டால், அது உங்கள் வாழ்க்கை முறையாகவே மாறிவிடும். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.
News September 29, 2025
கரூர் சம்பவம்: மேலும் ஒரு வழக்கு பதிவு

கரூரில் நடந்த துயர சம்பவத்தில், ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியதாக அடையாளம் தெரியாத தவெக தொண்டர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் டிரைவர் கெளதம் அளித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.