News September 28, 2025
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் PHOTOS

கரூரில் 40 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்து 20 மணிநேரங்களை கடந்தும் அங்கு மரண ஓலங்கள் தொடர்ந்து வருகிறது. 30-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் உடற்கூராய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் 3 பேர், ஒரே கிராமத்தில் 5 பேர் என அடுத்தடுத்த துயரங்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் கடைசி போட்டோக்கள் காண்போரை கண்கலங்க வைக்கிறது. #RIP
Similar News
News September 28, 2025
விஜய்யை தாக்கி பேசிய பதிவு.. சர்ச்சைக்கு கயாது விளக்கம்

கரூர் கூட்ட நெரிசலில் எனது நண்பரை இழந்துவிட்டேன். விஜய் சுயநல அரசியல் செய்து வருகிறார் என நடிகை கயாது லோஹர் பெயரிலான X தள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், அது போலி கணக்கு, அதில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், கரூரில் தனக்கு நண்பர்கள் யாரும் இல்லை எனவும், அந்த சம்பவத்தால் அதிகம் வருத்தமடைந்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
News September 28, 2025
PM மோடியை சந்தித்த துணை ஜனாதிபதி CPR!

டெல்லியில், PM மோடியை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது, கரூரில் நிகழ்ந்த துயரம் தொடர்பாக PM மோடி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சி.பி. ராதாகிருஷ்ணனுடன், பலதரப்பட்ட விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக PM மோடி தனது X பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
News September 28, 2025
அடித்து ஆடும் பாகிஸ்தான்

இந்தியா உடனான ஃபைனலில் பாகிஸ்தான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களை எடுத்துள்ளது. ஓப்பனிங் இறங்கிய ஃபர்ஹான் 57 ரன்களை விளாசியுள்ளார். அதேபோல், ஓபனிங் இறங்கி அவுட் ஆகாமல் சமான் 33 ரன்களை எடுத்து களத்தில் உள்ளார். வருண் சக்கரவர்த்தி மட்டும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.