News September 28, 2025
CBI விசாரணை நடத்த வேண்டும்: OPS

கரூர் துயர சம்பவத்தை CBI விசாரிக்க வேண்டும் என OPS வலியுறுத்தியுள்ளார். இறந்தவர்களின் குடும்ப சூழ்நிலையை பொறுத்து நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு வரைமுறைகளை முறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Similar News
News September 28, 2025
மனைவி, குழந்தைகளை மிஸ் செய்கிறேன்: அஜித்குமார்

ஷாலினி மட்டும் இல்லையென்றால், தன்னால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என அஜித்குமார் தெரிவித்துள்ளார். குழந்தைகள், குடும்பத்தை கவனித்து கொள்வது எளிதான காரியம் அல்ல. ரேஸிங், ஷூட்டிங் என எப்போதும் வெளியில் இருப்பதால், குடும்பத்தை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், வாழ்க்கையில் எதையாவது அடைய விரும்பினால், சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 28, 2025
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் PHOTOS

கரூரில் 40 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்து 20 மணிநேரங்களை கடந்தும் அங்கு மரண ஓலங்கள் தொடர்ந்து வருகிறது. 30-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் உடற்கூராய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் 3 பேர், ஒரே கிராமத்தில் 5 பேர் என அடுத்தடுத்த துயரங்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் கடைசி போட்டோக்கள் காண்போரை கண்கலங்க வைக்கிறது. #RIP
News September 28, 2025
2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்

ஜம்மு & காஷ்மீரின் குப்வாரா பகுதியில் 2 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றவர்கள் தற்போது கொல்லப்பட்டுள்ளனர். மேலும், உளவுத்தகவல்கள் அடிப்படையில் எல்லையில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.