News September 27, 2025
சற்றுமுன்: விஜய்யை பார்க்க விபரீத செயல்

விஜய்யை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவெக தொண்டர் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை போலி அடையாள அட்டையுடன் திருச்சி விமான நிலையத்திற்குள் தவெக தொண்டர் புகுந்துள்ளார். அவரை துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்திய பாதுகாப்பு படையினர், தீவிரமாக விசாரணை நடத்தினர். பின், விஜய்யை பார்ப்பதற்காக இப்படி செய்ததாக அவர் கூறியதை அடுத்து, கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பி வைக்கப்பட்டார்.
Similar News
News September 27, 2025
ஒட்டுமொத்த சனியின் உருவமே சீமான் தான்: ஜெயக்குமார்

மறைந்த தலைவர்களை பற்றி கொச்சையாக பேசினால் சீமானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சனியில் எத்தனையோ விதம் இருந்தாலும், ஒட்டுமொத்த சனியின் ஒற்றை உருவமாக சீமான் உள்ளார் என்றும் மறைந்த தலைவர்களை பற்றி பேசி அதிமுகவிடம் சீமான் வாங்கிக்கட்டி கொள்ள வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், சீமானுக்கு மறை கழன்றுவிட்டதாகவும் சைகை காண்பித்து அவர் விமர்சித்தார்.
News September 27, 2025
தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் உடையவரா நீங்க?

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர் ➼முதுகை வளைத்து, தட்டில் இருந்து உணவை எடுத்து சாப்பிடுவதால், செரிமானம் சீராகிறது ➼தரையில் அமரும்போது, வேகஸ் எனும் நரம்பு சுறுசுறுப்பாக செயல்படுவதால், வயிறு நிறைந்தவுடன் உடனடியாக தகவல் மூளைக்கு போகிறது. இதனால், உடல் எடை கட்டுக்குள் இருக்கும் ➼குடும்பத்துடன் தரையில் அமர்ந்து சாப்பிடும் போது, மன நிம்மதி ஏற்படும். SHARE.
News September 27, 2025
BREAKING: ஓபிஎஸ், TTV-க்கு அழைப்பு.. புதிய திருப்பம்

கூட்டணியில் இணைய TTV, OPS-க்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தினகரனை BJP தலைவர்கள் சந்திப்பது நல்லதுதான்; விரைவில் நல்ல முடிவு வரும் எனக் கூறிய அவர், நாங்கள் எல்லோரையும் வரவேற்கிறோம், தேவைப்பட்டால் நானும் டிடிவியை சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார். நேற்று OPS – TTV சந்தித்து பேசியிருந்த நிலையில், நயினார் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.